அனைத்துக் கட்சிக் கூட்டம்: அவசரமாய்க் கூட்டினார் வாஜ்பாய்
டெல்லி:
குஜராத் வன்முறை மற்றும் அயோத்தி விவகாரம் குறித்து விவாதிக்க இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைபிரதமர் வாஜ்பாய் அவசரமாகக் கூட்டியுள்ளார்.
அயோத்தியில் கோவில் கட்ட விஸ்வ ஹிந்துப் பரிஷத் எடுத்துள்ள முயற்சிகளால் அடுத்தடுத்து வன்முறைமூண்டுள்ளது. முதலில் குஜராத் மாநிலம் கோத்ரா என்ற இடத்தில் அயோத்தி கர சேவகர்கள் வந்த ரயில் தீ வைத்துஎரிக்கப்பட்டதில் 58 பேர் இறந்தனர்.
இதையடுத்து குஜராத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையில் இதுவரை 143 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்துகுஜராத்தில் வன்முறை தாண்டவமாடி வருகிறது. இரு மதத்தினரும் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் எதிர்க் கட்சிகள் இன்று அமளியில் இறங்கினர். இதனால் இனறுமுழுவதும் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் கர சேவகர்களை கூட விட்டதால் தான் இந்தவன்முறை வெடித்ததாக எதிர்க் கட்சியினர் மத்திய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
வன்முறையை போலீசாரால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் ராணுவத்தின் உதவியை அம் மாநில அரசுகோரியுள்ளது. இதையடுத்து ராணுவம் வந்திறங்க ஆரம்பித்துள்ளது.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்க முக்கிய கட்சித் தலைவர்களின் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய்கூட்டியுள்ளார். இன்று மாலை 5.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் சோனியா காந்தி, முலாயம் சிங் யாதவ், மயாவதி உள்ளிட்டவர்களும் முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகர்,குஜரால் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications