வீட்டுக்குப் போகும் அமைச்சர்கள்
சென்னை:
ஜெயலலிதாவின் புதிய அமைச்சரவையில் 10 பேர் பதவி இழந்துள்ளனர்.
அவர்கள் பெயர்- வகித்த துறை
அன்வர் ராஜா- தொழிலாளர் நலத்துறை. தமிழக அரசு ஊழியர் பிரச்சனையை முற்ற விட்டதாக இவர் மீதுகோபத்தில் இருந்தார் ஜெ.
பாண்டுரங்கன்- தொழில்துறை. ஜெயலலிதாவைப் பார்த்தால் கன்னத்தில் போடுவது மட்டுமே வேலையாகஇருந்தார். துறை குறித்து எந்த விவரமும் தெரியவில்லை.
சரோஜா- சுற்றுலாத்துறை. ஆரம்பத்தில் அமைதியாக இருந்தவர் பின்னால் காசு பார்க்க ஆரம்பித்தார் என்ற புகார்.இவரது தம்பியின் அட்டகாசம் ஓவராக இருந்தது. இவருக்கு எதிராக மக்கள் அவரது தொகுதியில் கருப்புக் கொடிஏற்றினர்.
சண்முகநாதன்- கைத்தறித்துறை. கைத்தறித்துறை தொழிலாளர் பிரச்சனையை சரியாகக் கையாளத் தவறியது.
சுப்பிரமணியன்- ஆதிதிராவிடர் நலத்துறை
திருநாவுக்கரசு- செய்தி விளம்பரத்துறை
ராஜேந்திர பிரசாத்- மீன்வளத்துறை
வைத்திலிங்கம்- ஊரக வளர்ச்சித்துறை
சண்முகவேலு- பால்வளம் மற்றும் பிற்பட்டோர் நலத்துறை












Click it and Unblock the Notifications