அரசிடம் உறுதி மொழி கேட்கிறது வி.எச்.பி.
டெல்லி:
ராமர் கோவில் கட்டுமானப் பணி துவங்கப்படுவதை ஒத்திவைக்க சம்மதித்துள்ள விஸ்வ ஹிந்து பரிஷத்,சர்ச்சைக்குரிய நிலத்தைத் தங்களிடம் தருவோம் என்று மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும் என்று நிபந்தனைவிதித்துள்ளது.
அடுத்த 3 மாதங்களுக்குள் அயோத்தியில் தூண்களை நிறுவ அனுமதித்து மத்திய அரசோ அல்லது ஆர்.எஸ்.எஸ்.அமைப்போ எழுத்து மூலமாக உறுதியளிக்க வேண்டும் என்றும் வி.எச்.பி. நிபந்தனை விதித்துள்ளது.
மேலும் இப்போதைக்குக் கட்டுமானப் பணிகளைத் தொடங்காவிட்டாலும், அது தொடங்கிய பிறகு அதற்கு மத்தியஅரசு போதிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றும் வி.எச்.பி. வலியுறுத்தியுள்ளது.
குஜராத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் 58 கரசேவகர்கள் உயிருடன் கொளுத்தப்பட்ட சம்பவத்தையடுத்து குஜராத்முழுவதும் வன்முறை வெடித்துள்ளது.
இந்த வன்முறையில் இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். வி.எச்.பி. அமைப்பும் இன்று நாடுமுழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
பிரச்சனைகள் எல்லை மீறிப் போய்க் கொண்டே இருப்பதையடுத்து, வி.எச்.பி. தற்போது ஓரளவிற்கு இறங்கிவந்துள்ளது போலத் தென்பட்டாலும், ராமர் கோவில் கட்டும் பணியை நிறுத்திக் கொள்வது போலத் தெரியவில்லை.
இதற்கிடையே அயோத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து அங்கு 30 கம்பெனி பாராமிலிட்டரி வீரர்களைமத்திய அரசு அனுப்பியுள்ளது. இதுபோக இன்னும் 70 கம்பெனி வீரர்கள் அடுத்த 2 நாட்களில் அயோத்தி வந்துசேரவுள்ளனர்.












Click it and Unblock the Notifications