குஜராத்தில் எரிக்கப்பட்ட 58 ரயில் பயணிகளில் 5 பேர் தமிழர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குஜராத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட சம்பவத்தில் பலியான 58 பேர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 2குழந்தைகளும் 3 பெண்களும் அடங்கியுள்ளனர்.

அயோத்தியிலிருந்து அகமதாபாத்துக்குச் சென்று கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ், குஜராத் மாநிலம் கோத்ராநகரில் எரிக்கப்பட்டது. இதில் 4 பெட்டிகளில் பயணம் செய்த 58 ராம பக்தர்கள் உயிருடன் எரிந்தனர். 50க்கும்மேற்பட்டவர்கள் பயங்கரத் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி (52), வைதேகி (55), அமிர்தவல்லி (58) ஆகிய3 பெண்களும் அவர்களுடன் சென்ற 2 குழந்தைகளும் இந்த ரயில் எரிப்புச் சம்பவத்தில் சிக்கி உடல் கருகிஉயிரிழந்தனர்.

இவர்களும் அயோத்தி சென்று ராமர் கோவில் கட்டுவதற்கான "பூர்ண யுக்தி" பூஜையில் கலந்து கொண்டு திரும்பிக்கொண்டிருந்தனர்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் துணைத் தலைவரான எஸ். வேதாந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+