தமிழகத்தில் பந்த் பாதிப்பு இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குஜராத் வன்முறை தொடர்பாக விஸ்வ ஹிந்து பரிஷத் இன்று அழைப்பு விடுத்த முழு அடைப்பிற்கு தமிழகத்தில்ஆதரவு இல்லை.

பதற்றம் நிறைந்த பகுதிகளில் அதிகமான அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் எந்தவிதமான வன்முறைச்சம்பவங்களும் ஏற்படவில்லை என்று தமிழக டி.ஜி.பி. நெய்ல்வால் கூறினார்.

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போலஇயங்கின. கடைகள் அனைத்தும் திறந்திருந்தன.

சாலைகளில் வாகனங்களும் வழக்கமான ஓடிக் கொண்டிருக்கின்றன.

இதற்கிடையே குஜராத்தில் ரயிலோடு கர சேவகர்கள் எரிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மாநிலத்தின் பல்வேறுஇடங்களிலும் வி.எச்.பி. அமைப்பினர் கண்டனக் கூட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தினர்.

அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டி முடிக்கும் வரை நாங்கள் ஓயப் போவதில்லை என்று சென்னையில்போராட்டம் நடத்திய வி.எச்.பி. அமைப்பினர் தெரிவித்தனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+