குஜராத்தில் மேலும் 29 பேர் பலி
அகமதாபாத்:
அயோத்தி விவகாரத்தில் ரயில் எரிக்கப்பட்டதை தொடர்ந்து நடந்த வன்முறையில் அகமதாபாத்தில்வெள்ளிக்கிழமை இரவு 29 பேர் பலியாகியுள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 300ஐ தாண்டிவிட்டது.
குஜராத் மாநிலத்தில் உள்ள மெக்சனா மாவட்டத்தில் உள்ள சதார்பூர் கிராமத்தில் வெள்ளி இரவுவன்முறையாளர்கள் பெருமளவில் கூடினர்.
இதனால் வன்முறையாளர்களை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி 2 ரவுண்டுகள் சுட்டனர். இதனால்வன்முறையாளர்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.
போலீஸ் ரோந்து வண்டிகள் சென்றதும் வன்முறையாளர்கள் திரும்பவும் வன்முறையில் ஈடுபட்டனர்.வன்முறையாளர்கள் அங்குள்ள வீடுகளுக்கும் கடைகளுக்கு தீ வைத்தனர்.
இதில் வீடுகளில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 27 பேர் தீயில் கருகி இறந்தனர். இந்த கிராமத்தில் மட்டும்300 பேர் வசித்து வருகின்றனர். இதில் 27 பேர் கருகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். எவ்வளவு பேர்இந்த தீயில் கருகியிருப்பார்கள் என்று தெரியவில்லை என்று போலீசார் கூறுகின்றனர்.
கரசேவைக்கு செல்ல முயன்ற 50 பேர் கைது
இந்நிலையில் அயோத்தியில் கரசேவைக்கு செல்ல முயன்ற 50 பேரை மும்பையில் போலீசார் கைது செய்தனர்.
இன்று காலை மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் புஷ்பக் எக்ஸ்பிரஸில் அயோத்திக்குகரசேவைக்கு செல்ல முற்பட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications