வண்டலூரைக் கலக்கிய சிறுத்தை பிடிபட்டது: பிடிக்க உதவியது செக்ஸ்
சென்னை:
சென்னை வண்டலூர் பூங்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ஆண் சிறுத்தை இன்று அதிகாலைபிடிபட்டது. அதை பெண் சிறுத்தையை வைத்து வனத்துறையினர் பிடித்தனர்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன் வண்டலூர் பூங்காவை ஒட்டிய சாலையில் சிங்கம் போன்ற ஒரு மிருகத்தைப்பார்த்ததாக இருவர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து பூங்காவில் கூண்டுக்கள் இருந்த மிருகங்கள்எண்ணிப் பார்க்கப்பட்டன. கூண்டுகளில் இருந்த மிருகங்கள் எண்ணிக்கை சரியாக இருந்தது.
இதனால் வெளியில் இருந்து தான் ஏதாவது ஒரு புதிய மிருகம் வந்திருக்க வேண்டும் என்று வனத்துறையினர்கருதினர்.
இந் நிலையில் அந்த மிருகம் பூங்காவில் இருந்த 6 மான்களைக் கொன்றது. பின்னர் அருகாமையில் இருந்தகிராமங்களிலும் புகுந்து ஆடுகளையும் அடித்துத் தின்றது.
அது புலியா, சிறுத்தையா, சிங்கமா அல்லது வேறேதும் மிருகமா என்று தெரியாமல் வனத்துறையினர் அல்லாடிவந்தனர். அதைப் பிடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளம் பலன் தரவில்லை.பல இடங்களில் அந்த மிருகத்தைப் பிடிக்க திறந்த கூண்டுக்குள் ஆடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. ஆனால்,அந்த மிருகம் பிடிபடாமலேயே இருந்து வந்தது.
வனத்துறையினர் துப்பாக்கிகளுடன் அந்த மிருகத்தைத் தேடி இரவு பகலாக சுற்றி வந்தனர். ஒருமுறை வனக்காவலர்கள் மீது பாய்ந்துவிட்டு சில நொடிகளில் அந்த மிருகம் ஓடித் தப்பிவிட்டது.
இதையடுத்து தான் அது சிறுத்தை என்பது தெரியவந்தது. அது ஆண் சிறுத்தை என்பதையும் வனத்துறையினர்தெரிந்து கொண்டனர். அதைப் பிடிக்க பல கி.மீ. தூரத்துக்கு இரும்பு வேலியும் அமைக்கப்பட்டது.
ஆனாலும் அந்த சிறுத்தை பிடிபடாமலேயே இருந்து வந்தது. இதையடுத்து மான் போன்ற மிருகங்களைக்காப்பாற்றுவதற்காக அவை பூங்காவில் இருந்து பிடிக்கப்பட்டு பாதுகாப்பாக கூண்டுகளில் அடைக்கப்பட்டது.
பொது மக்கள் கூட பூங்காவைப் பார்வையிட அனுமதிக்கப்படவில்லை. ஒரு மாத காலம் இந்தப் பூங்காமூடப்பட்டது. தேடித் தேடிப் பார்த்தும் மிருகம் சிக்காமல் போனதால் கடந்த மாதம் 23ம் தேதி இந்தப் பூங்காமீண்டும் திறக்கப்பட்டது. பூங்காவை சுற்றிப் பார்க்கச் செல்லும் பொது மக்களின் வாகனங்களில் துப்பாக்கி ஏந்தியகாவலர்கள் உடன் சென்று வந்தனர்.
இந் நிலையில் மேலும் சில மிருகங்களை இந்த சிறுத்தைக் கொன்றது. இதையடுத்து அதைப் பிடிக்கும் பணிமீண்டும் தொடங்கியது. வனத்துறையினர் இரவும் பகலும் துப்பாக்கிகளுடன் வனப் பூங்காவுக்குள் சுற்றி வந்தனர்.ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.
இதையடுத்து மிக நூதனமான முறை மூலமாக இந்த மிருகத்தை அதிகாரிகள் பிடித்தனர். இந்த மிருகத்தைப் பிடிக்கஅவர்கள் பயன்படுத்திய டெக்னிக் செக்ஸ்.
எதற்கும் மாட்டாமல் தப்பித்து வந்த அந்த மிருகத்தை செக்ஸ் மூலமாக பிடித்துவிட்டனர்.
அந்த சிறுத்தையின் படுபயங்கரமான மூடில் இருப்பது அதன் வெறித்தனமான தாக்குதல் மூலம் தெரியவந்தது.இதையடுத்து அதே போன்ற செக்ஸ் ஆர்வத்தில் இருந்த ஒரு பெண் சிறுத்தையை திறந்த கூண்டில் வைத்துசங்கிலியால் பிணைத்து வைத்தனர்.
பெண் சிறுத்தையின் வாசனையையும் அதன் ஒலியையும் கேட்ட இந்த ஆண் மிருகம் இன்று அதிகாலை கூண்டுக்குஅருகே வந்தது. பின்னர் கூண்டுக்கள் நுழைந்தது. இந்த கூண்டை தொடர்ந்து அருகில் இருந்து கண்காணித்து வந்தவனத்துறையினர் உடனடியாக அதை அடைத்தனர்.
இதையடுத்து கூண்டிலிருந்து தப்ப அந்த மிருகம் மிக பயங்கரமாக முயற்சி செய்தது. இதைத் தொடர்ந்து அதற்குமயக்க மருந்து செலுத்து அதை அமைதிப்படுத்தினர்.
இது குறித்து வண்டலூர் பூங்காவின் இயக்குனர் பி.சி.தியாகி கூறுகையில், இந்த மிருகம் பூங்காவைச் சேர்ந்ததுஅல்ல. அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியைச் சேர்ந்தது. அது பூங்காவுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்துவந்தது. இங்குள்ள மிருகங்களை திண்றுவிட்டு மீண்டும் காட்டுப் பகுதிக்கே தப்பி வந்தது. இதனால், தான் அதைப்பிடிக்க முடியவில்லை.
ஏதேதோ முயற்சிகள் செய்து பார்த்தோம். ஆனாலும் அது சிக்கவில்லை. இதனால் தான் செக்ஸ் ஆர்வத்தில்இருக்கும் பெண் சிறுத்தை மூலமாக அதைப் பிடிக்க முயற்சி செய்தோம். இந்த முயற்சி இன்று காலை பலன்தந்துவிட்டது.
பிடிபட்ட இந்த சிறுத்தைக்கு 8 முதல் 10 வயது இருக்கும் என்றார்.
கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பின் இப்போது தான் பூங்கா அதிகாரிகள் நிம்மதிக்குத் திரும்பியுள்ளனர்.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்?












Click it and Unblock the Notifications