குஜராத்: மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் கண்டனம்
டெல்லி:
குஜராத்தில் நடந்து வரும் வன்முறையையும் படுகொலைகளையும் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
குஜராத் கலவரம், மற்றும் அயோத்தி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக இன்று (திங்கள்கிழமை) அனைத்துஎதிர்கட்சிகளின் கூட்டத்தை டெல்லியில் காங்கிரஸ் அலுவகத்தில் சோனியா காந்தி கூட்டினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சோம்நாத் சட்டர்ஜி,ரூப்சந்த் பால், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் ரகுவன்ஸ் பிரசாத் சிங், ராம்ஜீ லால் சுமன், பனட்வாலா, பல்வந்த் சிங்உட்பட பல எதிர்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
குஜராத்தில் நடக்கும் படுகொலைகளை நிறுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள மக்களுக்குகுறிப்பாக சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.
கலவரம் அதிகமாக நடக்க உள்ள பகுதிகளுக்கு ராணுவத்தை அனுப்பி கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசுக்குஎதிர்கட்சிகள் அனைத்தும் கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும் குஜராத்தில் நடக்கும் கலவரத்தின் நிலவரம் குறித்து கண்டறிய எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு குழுஅமைக்கப் போவதாகவும், குஜராத் அரசு கலவரத்தை அடக்க சரியான நடவடிக்கை எடுக்காததை கண்டித்துடெல்லியில் தர்ணா போராட்டம் நடத்த போவதாகவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உ.பியில் கவர்னர் ஆட்சியா?
இதற்கிடையில்உத்தர பிரதேசத்தில் கவர்னர் ஆட்சி ஏற்படுத்துவதற்காக தான், குஜராத்தில் மத்திய அரசுவன்முறையை தூண்டி விட்டிருப்பதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் முலாயம் சிங் கூறியதாவது:
உத்தரபிரதேசத்தில் தனி பெரும் கட்சியாக சமாஜ்வாடி உள்ளது. எங்களை ஆட்சி அமைக்க விடாமல் கவர்னர்ஆட்சியை ஏற்படுத்துவதற்காகவே அரசு குஜராத்தில் கலவரத்தை தூண்டியுள்ளது. இந்தக் கலவரத்தைஅயோத்தியிலும் பரப்பி அதன்மூலம் உத்தரபி பிரசேத்தில் கவர்னர் ஆட்சி கொண்டு வர பா.ஜ.க. முயல்கிறது.
உத்தரபிரதேசத்தில் ஆட்சி அமைக்க விடாமல் தடுப்பதற்காக ரகசிய சதி வேலைகளில் பாஜக இறங்கியுள்ளது.
பகுஜன் சமாஜ்வாடி கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளித்தால் உ.பி.யில் ஆட்சியை அமைப்போம் என பாஜககூறியிருப்பது ஆச்சரியமளிக்கிறது என்றார் முலாயம் சிங்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications