பூட்டிய மண்டபத்துக்குள் ஊர்வலம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்.
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நடத்த இருந்த ஊர்வலத்திற்கு போலீசார் தடை விதித்து அவர்கள்இருந்த திருமண்டபத்தை பூட்டியதால், பூட்டிய மண்டபத்துக்குள் ஊர்வலமும், பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஊர்வலமும்,பொதுக்கூட்டமும் நடத்தப் போவதாக அறிவித்தது.
ஆனால் குஜராத்தில் பெரும் வன்முறை நடந்து கொண்டிருப்பதாலும், சுப்ரீம் கோர்ட் ஊர்வலத்துக்கு தடைவிதித்திருப்பதை சுட்டிக்காட்டியும் போலீசார் ஊர்வலத்துக்கு தடை விதிக்க முடிவு செய்து ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் அவர்கள் ஊர்வலத்தை கைவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், அவர்கள் திட்டமிட்டபடி கண்டிப்பாக ஊர்வலம் நடக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தெரிவித்தனர்.இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த 150 பேர் கூடியிருந்த சிந்தாமணி முத்தையா திருமணமண்டபத்திற்கு அருகில் ஏராளமான போலீசார் குவிந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணியளவில் திருமணம ண்டபத்திலிருந்து ஊர்வலம் செல்ல ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினர் புறப்பட்டனர். ஆனால் போலீசார் அவர்களை மண்டப வாசலிலேயே தடுத்து நிறுத்தினர்.
மண்டப வாசலில் உள்ள 2 இரும்பு கேட்டுகளிலும் பூட்டு போட்டு பூட்டினார் மாவட்ட எஸ்.பி. பிரேம்குமார்.இதனால் போலீசாருக்கும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினருக்கும் இடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தொண்டர்கள் மண்டபத்தில் உள்ள மைதானத்திற்குள்ளேயே ஊர்வலம்சென்றனர். ஊர்வலம் முடிந்ததும் திருமண மண்டபத்தின் முன்பு மேடை அமைத்து அங்கேயே பொதுக்கூட்டமும்நடத்தினர்.












Click it and Unblock the Notifications