Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஜராத் ரயில் எரிப்பு தொடர்பாக 27 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

கோத்ரா:

குஜராத்தில் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்டது தொடர்பாக இதுவரை 27 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.
அயோத்திக்கு கரசேவைக்காக சென்று கொண்டிருந்த ராம பக்தர்கள் இருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில்எரிக்கப்பட்டதையடுத்து குஜராத் மாவட்டத்தில் நடந்த கலவரத்தில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக இது வரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் காங்கிரஸை சேர்ந்தவர்கள். கோத்ரா நகர் பலிகாவின் தலைவரும், காங்கிரஸ்கட்சியை சேர்ந்தவருமான முகமது ஹூசைன் கலோதா இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம் என்பதற்கானஆதாரங்களும் கிடைத்துள்ளதாக குஜராத் பா.ஜ.க. அரசு கூறியுள்ளது.

இவர் இதற்கு முன்பு இந்த பகுதியில் மதக்கலவரம் நடந்த போதும் இவர் முக்கிய காரணமாக இருந்தவர் என்றும்கூறியுள்ளது.

மேலும் சலிம் சேத், அப்துல் பாந்தியா இருவரும் காங்கிரஸ் கவுன்சிலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில்பாந்தியா 1980-81 மதக்கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர். சலிம் சேத்தும் முன்பு நடந்த கலவரங்களில்சம்பந்தப்பட்டவர் தான்.

இந்த சம்பவம் தொடர்பாக பரூக் பானா, பிலால் ஹாஜீ ஆகிய 2 காங்கிரஸ் கவுன்சிலர்கள் தலைமறைவாகியுள்ளனர்என குஜராத் போலீசார் கூறியுள்ளனர்.

இதில் ஹாஜீ என்பவர் தீயணைப்பு படையினர் தீயை அணைக்க வரும் வழியில் அவர்களை போக விடாமல் தடுத்துநிறுத்தியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலரின் விவரங்களும் தெரியவந்துள்ளதாக குஜராத் போலீசின் தீவிரவாதத்தடுப்புப் பிரிவின் டி.ஐ.ஜி. விபுல் விஜய் கூறியுள்ளார். இவர்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வரும்பணக்காரர்கள் எனவும் போலி பாஸ்போர்ட்டுகள் வைத்திருப்பவர்கள் என்றும் விரைவில் இவர்கள் பிடிபடுவர்என்றும் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+