நாடாளுமன்ற அதிமுக நிர்வாகிகள் மாற்றம்
சென்னை:
நாடாளுமன்ற அதிமுக நிர்வாகிகள் சிலரை நீக்கி விட்டு ஜெயலலிதா புதிதாக நாடாளுமன்ற நிர்வாகிகளைஅறிவித்துள்ளார்.
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றவுடன் பல அமைச்சர்களை நீக்கி விட்டு புதிய அமைச்சர்களை அறிவித்தார்.அதே போல் இப்போது நாடாளுமன்ற அதிமுக நிர்வாகிகள் பலரையும் நீக்கி உள்ளார்.
முன்பு நாடாளுமன்ற அதிமுக நிர்வாகிகளாக 17 பேர் இருந்தனர். இப்போது 6 பேரை தான் ஜெயலலிதாநியமித்துள்ளார்.
முன்பு அதிமுக நிர்வாகிகளாக பதவி வகித்த எஸ்.சீனிவாசன், அதிமுக தலைமை நிலையச் செயலாளர்கே.ஏ.செங்கோட்டையன், புலமைப்பித்தன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
விசாலாட்சி நெடுஞ்செழியன், கல்வித்துறை அமைச்சர் எம்.தம்பிதுரை, அதிமுக எம்.பி. கே.மலைச்சாமி, ஐன்ஸ்டீன்செல்வராஜ், எஸ்.அன்பழகன், சயீத்கான் ஆகியோர் நாடாளுமன்ற அதிமுக நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்பாளர்களை இவர்கள் தேர்வு செய்வர்.


Click it and Unblock the Notifications
