கிக் ஏறலையே ஏண்டா?: 2 பேர் கொலை
கரூர்:
குளித்தலை அருகே மதுக்குடித்தும் கிக் ஏறாததால் ஏற்பட்ட தகராறில் மதுக்கடை தாக்கப்பட்டது. இதில் இருவர்கொலை செய்யப்பட்டனர்.
குளித்தலை அருகே உளள பெரியபனையூரை சேர்ந்தவர்கள் மணிமுத்து (28), செந்தில்குமார் (29), தர்மலிங்கம்(29), சக்திவேல் (26), இன்னொரு சக்திவேல் (27). இவர்கள் அனைவரும் உறவினர்கள்.
ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு நெய்தலூர் காலனியில் உள்ள சரவணா ஒயின்ஸில் அனைவரும்கூட்டாக மது அருந்த சென்றனர். மது அருந்தியும் கிக் ஏறாததால் மதுக்கடை ஊழியர்களிடம் 5 பேரும் தகராறுசெய்தனர்.
மேலும் கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். இதனால் கடை ஊழியர்கள் மனோகரன்,பெரியசாமி, மோகன்தாஸ் ஆகியோருடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
வாய்த்தகராறு முற்றி கைகலப்பாகியதால் கடை ஊழியர் பெரியசாமி கத்தியால் தாக்க துவங்கினார். இதில்,தர்மலிங்கம், சக்திவேல், இன்னொரு சக்திவேல் ஆகியோருக்கு குத்து விழுந்தது. இவர்களின் உறவினர்களானமணிமுத்துவும், செந்தில்குமாரும் ஓடி விட்டதால் அவர்கள் தப்பினர்.
அப்போது கடையின் பங்குதாரரின் உறவினர் தங்கவேல் அன்றைய வசூல் கணக்கு பார்க்க வந்தார். இந்தசண்டையை தடுக்க முயன்ற அவர் மீதும் பெரியசாமி கத்தியால் குத்தியுள்ளார்.
படுகாயமடைந்த தர்மலிங்கம், 2 சக்திவேல்கள், தங்கவேலு ஆகியோரை திருச்சி தனியார் மருத்துவமனையில்சேர்ப்பதற்காக கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும்வழியிலேயே தர்மலிங்கம் இறந்தார்.தங்கவேல் மருத்துவமனையில் இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாகிவிட்ட மதுக் கடை ஊழியர்களை தேடிவருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications