திமுகவுக்கு சுயமரியாதை உள்ளதா? சுவாமி சந்தேகம்
சென்னை:
முன்னுக்குப் பின் முரணாக பேசி வரும் கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என ஜனதாகட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.
சென்னை சாந்தோமில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களிடம் சுவாமி கூறியதாவது:
அடிக்கடி சுயமரியாதை பேசி வரும் கட்சி திமுக. இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகனும், இந்தக்கட்சியின் தலைவர் கருணாநிதியின் மகன் ஸ்டாலினும் ஜெயலலிதா பதவியேற்பு விழாவுக்குச் சென்றபோது 5வதுவரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார வைக்கப்பட்டனர்.
சுயமரியாதை இருந்திருந்தால் இந்த அவமரியாதையை எதிர்த்து அன்பழகனும் ஸ்டாலினும் அந்த நிகழ்ச்சியைவிட்டு வெளியேறி இருக்க வேண்டும். வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும். ஆனால்,அதைச் செய்யவில்லை. இதனால், திமுக சுயமரியாதை பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
திமுக தலைவர் கருணாநிதி முன்னுக்குப் பின் முரணாக பேச ஆரம்பித்துவிட்டார். அவர் பேசாமல் அரசியலில்இருந்து ஓய்வு பெற்றுக் கொள்வது நல்லது.
ஜெயலலிதா முதல்வராகிவிட்டதால் தமிழகத்துக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. விரைவில் மாபெரும்நிதி நெருக்கடியில் தமிழகம் சிக்கப் போகிறது. அதை ஜெயலலிதாவால் நிச்சயம் சமாளிக்க முடியாது.
பா.ஜ.க.- அதிமுக கூட்டணி எல்லாம் வராது.
அயோத்தி நகர் முழுவதையும் சர்ச்சைக்குறிய பகுதியாக அறிவிக்க வேண்டும். அங்குள்ள விஸ்வ ஹிந்து பரிஷத்தலைவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
தமிழகத்தில் சைதாப்பேட்டை, வாணியம்பாடி இடைத் தேர்தல்களில் ஜனதா கட்சி நிச்சயம் போட்டியிடும் என்றார்சுவாமி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications