ராஜ்யசபா எம்.பி பதவி: சோனியாவிடம் ஆதரவு கேட்கிறார் வாசன்
டெல்லி:
ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் தமாகாவுக்கு ஆதரவு கேட்டு, திங்கள்கிழமை சோனியாகாந்தியை சந்தித்துபேச்சுவார்த்தை நடத்தினார் தமாகா தலைவர் வாசன்.
ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக் காலங்கள் முடிவதைத் தொடர்ந்து, வரும் 27ம் தேதி அதற்கான தேர்தல்நடக்கிறது.
தமிழகத்தில் மட்டும் 6 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 7ம்தேதி தொடங்கி, 14ம் தேதி முடிவடைகிறது. இதில் 4 பதவிகளை அதிமுக கைப்பற்றும். ஒரு இடம் திமுகவுக்குக்கிடைக்கும். இன்னும் ஒரு இடத்தை பிற கட்சிகள் துணையுடன் த.மா.கா. வெல்ல முடியும்.
த.மா.கா. தலைவர் வாசன் ராஜ்யசபா எம்.பியாக விரும்புகிறார். ஆனால் இதற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கட்சிகளின் ஆதரவும் தேவை.
அதனால், கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு கடிதம் எழுதியுள்ளார் வாசன். காங்கிரஸ் கட்சியின்ஆதரவையும் கேட்க முடிவு செய்து, இதற்காக ஞாயிற்றுக்கிழமை வாசன் டெல்லி புறப்பட்டு சென்றார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் வாசன். தொடர்ந்து இன்றும்அவரை சந்தித்து பேச இருக்கிறார்.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு இருந்தால் மட்டுமே வாசன் ராஜ்யசபா எம்.பி.யாக முடியும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications