அமைதி முயற்சி: ரணிலுக்கு சந்திரிகா திடீர் ஆதரவு
கொழும்பு:
இல்லங்கையில் அமைதி ஏற்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயுடன் இணைந்து செயல்பட அதிபர்சந்திரிகா குமாராதுங்கா தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதன்படி சமீபத்தில் விடுதலைப்புலிகள் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள தமிழர்கள் மீதான பொருளாதாரத் தடைவிலக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நார்வே தூதுக்குழுவின் உதவியுடன் இரு தரப்பினரிடையேயும் நிரந்தர போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஆனால் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சில பகுதிகள் இலங்கையின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும்குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் தான் அதை ரத்து செய்யப்போவதாகவும் சந்திரிகா கூறியிருந்தார்.
இந்நிலையில் அவர் தனது முடிவை திடீரென மாற்றிக் கொண்டுள்ளார். இது தொடர்பாக சந்திரிகாவின் செய்திதொடர்பாளர் ஹரிம் பெரிஸ் கூறியதாவது:
இலங்கையில் அமைதி ஏற்படுத்துவதற்காக பிரதமருடன் சேர்ந்து அதிபரும் முயற்சி செய்யப் போகிறார்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை வேண்டுமென்றே அதிபர் சந்திரிகா எதிர்க்கிறார் என்பது தவறான கருத்து. ஒப்பந்தம்குறித்து அவருடைய கருத்தை கூறுவதிலும், ஆலோசனை வழங்குவதிலும் எந்த ஒரு தவறும் இல்லை என்றார்பெரிஸ்.
சிவராத்திரி: ராணுவப்பாதுகாப்பு தளர்வு
இந் நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு யாழ்பாணத்துக்கு சென்று வர இருந்த கட்டுப்பாடுகளை ராணுவம்தளர்த்தியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட உடனேயே விடுதலைப்புலிகளின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்த பொருளாதாரதடை நீக்கப்பட்டு உணவு பொருட்கள் சகஜமாக எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவராத்திரி பண்டிகை செவ்வாய்க்கிழமை வருகிறது. இதை முன்னிட்டு யாழ்பாணம் மற்றும் தமிழர்பகுதிகளுக்குச் செல்ல இருந்த ராணுவக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
யாழ்பாணத்தில் உள்ள இந்து கோவில்களுக்கு எந்த தடையும் இல்லாமல் சென்று வரும் வகையில் இந்தகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications