எம்.பி. பதவிக்கு காங்கிரஸ் ஆதரவை வாசன் நாடுவது ஏன்?
சென்னை:
ராஜ்யசபா தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் போட்டியிடுகிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடனேயே அவர்எம்.பியாகிவிட முடியும். ஆனாலும் அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ஆதரவைக் கோரி வருகிறார்.
அவருக்கு ஆதரவு தருவது குறித்து இடது சாரிக் கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் இன்னும் முடிவு எதையும் தெரிவிக்கவில்லை.
தமிழகத்திலிருந்து ஓய்வு பெறும் 6 ராஜ்யசபா எம்.பிக்களுக்குப் பதிலாக புதிதாக 6 பேரை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடைபெறவுள்ளது.இதில் அதிமுக 4 இடங்களில் வெற்றி பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது. திமுக ஒரு இடத்தில் வெற்றி பெற முடியும். மீதமுள்ள ஒரு இடத்தில்தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடலாம்.
தமாகாவுக்கு சட்டசபையில் தற்போது 23 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். ஒருவர் வெற்றி பெற வேண்டுமானால் 34 எம்.எல்.ஏக்களின்ஆதரவு தேவை. எனவே வெற்றிக்குத் தேவைப்படும் ஓட்டுக்களை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ்கட்சியிடமிருந்து பெற தமாகா முடிவு செய்துள்ளது.
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 11 ஆகும். காங்கிரஸ் கட்சிக்கு 7 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் ஆதரவுஇல்லாமலும் கூட தமாகாவால் வெல்ல முடியும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு மட்டுமே போதுமானதாக இருக்கிறது. இருப்பினும்கடைசி நேரத்தில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு விட்டால் என்ற பயம் காரணமாகவே காங்கிரஸ் ஆதரவையும் தமாகா நாடுகிறது.
மேலும் காங்கிரஸை தான் புறக்கணிப்பதாக எந்த விதத்திலும் தவறான தகவல் பரவி விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார் வாசன்.பெரும் கோஷ்டிப் பூசலில் சிக்கியுள்ள காங்கிரஸ் தலைவர்கள் தன்னைப் பற்றி சோனியாவிடம் என்ன மாதிரியான தகவல்களைக் கூறிவருகின்றனர் என்பதும் அவருக்குத் தெரியவில்லை.
இந் நிலையில் காங்கிரஸ் ஆதரவு தேவையில்லாதபோதே கூட அந்தக் கட்சியின் ஆதரவைக் கேட்டுப் பெறுவது சோனியாவுடனானஉறவை பலப்படுத்தும் என வாசன் நினைக்கிறார். இதற்காக கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் முற்றுகையிட்டுள்ள வாசன் நேற்றுமீண்டும் சோனியாவைச் சந்தித்தார்.
அதே போல கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் அவர் சந்திப்பார் என்று தெரிகிறது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications