அருந்ததி ராய் விடுதலை
டெல்லி:
உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ாக ஒரு நாள் சிறையில் அடைக்கப்பட்ட சர்வதேச புகழ்பெற்றநாவலாசிரியை அருந்ததி ராய் இன்று விடுவிக்கப்பட்டார்.
நேற்று காலை அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு விதிக்கப்பட்ட ரூ. 2,000 அபராதத்தையும் அவர்செலுத்தினார். இதைச் செலுத்தத் தவறியிருந்தால் மேலும் 3 மாதம் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்.
குஜராத்தில் நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் சரோவர் அணைக்கட்டுத் திட்டங்களால் லட்சக்கணக்கானஏழை மக்கள் இடம் பெயர்ந்து அவதிப்பட்டு வருவதைக் கண்டித்து சமூக சேவகி மேதா பாட்கருடன் இணைந்துஅருந்ததியும் போராடி வருகிறார்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடந்த போராட்டத்திலும் அருந்ததி கலந்து கொண்டார். இது குறித்துநீதிமன்றம் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளித்த அருந்ததி அதில் நீதிபதிகளையும் அவர்களின் தீர்ப்புகளையும் விமர்சித்து இருந்தார்.
இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், அதற்கு அருந்ததி மறுப்புதெரிவித்ததால் அவரை ஒரு நாள் சிறையில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறைக்குப் போகும்போது கூட நான் நீதிமன்றத்துக்கு அனுப்பிய பதிலில் உண்மை இருப்பது இந்தத் தீர்ப்பின் மூலம்உறுதியாகிவிட்டது என்று கூறிவிட்டுச் சென்றார் அருந்ததி.
முன்னதாக அருந்ததி அடைக்கப்பட்டிருந்த சிறையின் வாயிலில் மேதா பாட்கரும், அணைக்கட்டுத் திட்டங்களால்பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களும் போராட்டம் நடத்தினர்.
தனது தலைசிறந்த நாவலுக்காக புக்கர் பிரைஸ் விருது வென்றவர் அருந்ததி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications