அயோத்தி: வி.எச்.பியின் பல்டியைத் தொடந்து முஸ்லீம் அமைப்பும் பிடிவாதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அயோத்தி விவகாரத்தில் சமரசம் ஏற்படுத்தும் காஞ்சி சங்கராச்சாரியாரின் முயற்சிகளுக்கு மேலும் ஒரு அடிவிழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் முதலில் நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படுவோம் என்று கூறிய வி.எச்.பி. பல்டி அடித்தது.நீதிமன்றத் தீர்ப்புக்கெல்லாம் கட்டுப்பட முடியாது, 15ம் தேதி கோவில் கட்டும் பணியைத் தொடங்கியே தீருவோம்என வி.எச்.பி. நேற்று அறிவித்தது.

இதையடுத்து இஸ்லாமிய சட்ட வாரியமும் புதிய நிபந்தனையை விதித்துள்ளது.

15ம் தேதி கோவில் கட்டும் பணியை தொடங்குவோம் என்று கூறி வரும் வி.எச்.பி. முதலில் அந்தத் திட்டத்தைஒத்திவைக்க வேண்டும். இதற்கான உறுதிமொழியை வி.எச்.பி. தந்தால் தான் அயோத்தியில் பிரச்சனைக்குள்ளாதஇடத்தை அவர்களுக்குத் தர நாங்கள் ஒப்புக் கொள்வோம் என சட்ட வாரியம் கூறியுள்ளது.

இது குறித்து சட்ட வாரியத்தின் ஒருங்கிணைப்பாளர் இலியாஸ் கூறுகையில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்துக்குஅருகே உள்ள பிரச்சனைகுள்ளாகாத இடத்தில் கோவில் கட்ட அனுமதி தந்தால், இடிக்கப்பட்ட மசூதி தொடர்பாகநீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் கட்டுபட தயாராக இருப்பதாக வி.எச்.பி. கூறியது. இதை ஒரு உறுதிமொழியாகவேசஙாகராச்சாரியாரிடம் கூறியது. ஆனால், இப்போது நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட முடியாது என்று கூறுகிறது.

சங்கராச்சாரியாரிடம் கொடுத்த உறுதிமொழியைக் கூட வி.எச்.பி. கடைபிடிக்கத் தயாராக இல்லை. எனவே, எங்கள்நிலையையும் மாற்றிக் கொண்டுவிட்டோம். தேவைப்பட்டால் 15ம் தேதி நடக்கவுள்ள கோவில் கட்டும் பணியைநிறுத்த நீதிமன்ற உதவியையும் நாடுவோம்.

சங்கராச்சாரியார் எங்களுக்குத் தவறான தகவல் கொடுத்தாரா அல்லது வி.எச்.பி. தான் உண்மையிலேயே தனதுஉறுதிமொழியில் இருந்து பின் வாங்கிவிட்டதா என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையே கடந்த 3 நாட்களாக டெல்லியில் தங்கியிருந்த சங்கராச்சாரியார் இன்று சிறப்பு விமானத்தில் குஜராத்சென்றுள்ளார்.

இந் நிலையில் வி.எச்.பி. தலைவர்களும் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அயோத்தியில் கோவில் கட்ட மத்திய அரசு அனுமதி தராத வரை டெல்லியைவிட்டுப் போக மாட்டேன் என்றுசூளுரைத்த ராமஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவர் பரமஹம்ஸ் ராமச்சந்திர தாஸ் இன்று அயோத்திக்குப்புறப்படுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+