மதுரையில் தப்பிய கைதிகளை சுட்டுப் பிடிக்க உத்தரவு
மதுரை:
மதுரை அருகே நேற்று (வியாழக்கிழமை) தப்பிய 2 அல்-உம்மா தீவிரவாதிகளைத் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பதற்கு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும் வெடிகுண்டுகளைவீசியும் அங்கிருந்து 2 அல்-உம்மா கைதிகள் சிலர் காரில் வந்து கடத்திச் சென்றனர்.
இவர்களைத் துரத்திய ஒரு போலீசுக்குக் குண்டுக் காயம் ஏற்பட்டது. மதுரை ரிங் ரோட்டியில் அவர்களைத் துரத்தியசிந்தாமணி போலீசார் மீதும் அந்தத் தீவிரவாதிகள் சராமாரியாகச் சுட்டதில் ஜீப்பின் முன்புறக் கண்ணாடிகள்எல்லாம் நொறுங்கி விட்டன.
பின்னர் ஒரு ஆட்டோவில் ஏறித் தப்பிச் சென்ற தீவிரவாதிகளைத் தேடி தற்போது தமிழகம் முழுவதும் வலைவிரிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு முழுவதும் மதுரை உள்பட தமிழகத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தி, தப்பிச் சென்றதீவிரவாதிகளைத் தேடினர். சந்தேகத்திற்கிடமான நபர்களைப் பிடித்து விசாரிப்பதற்கும் போலீசாருக்கு அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தப்பிய கைதிகளையும் அவர்களைக் கொண்டு சென்றவர்களையும் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கவும்போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பியான கே. நடராஜன் மதுரையில் முகாமிட்டு, கைதிகள்தப்பிச் சென்ற சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
தப்பிச் சென்ற தீவிரவாதிகள் மதுரையில்தான் ஒளிந்துள்ளனர் என்றும் அவர்களை விரைவில் பிடித்து விடுவோம்என்றும் நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கைதிகளைத் தப்ப விட்ட போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்என்றும் கூறிய நடராஜன், உளவுத் துறையும் இதுகுறித்த எச்சரிக்கையைத் தருவதற்குத் தவறி விட்டதாகத்தெரிவித்தார்.
தாங்கள் தாக்கப்படும்போது துப்பாக்கியால் சுட்டுக் கைதிகளைப் பிடிக்க முடியும் என்று தெரிந்த பிறகும், போலீசார்ஏன் அதைச் செய்யவில்லை என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications