இந்தியா மீது அமெரிக்கா திடீர் பாசம்
வாஷிங்டன்:
இந்தியாவுக்குள் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுவதை உடனடியாக நிறுத்துமாறு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ்முஷாரபிடம் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வெளிப்படையாகவே கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இதுவரை பாகிஸ்தானை பாராட்டி வந்த அமெரிக்காவின் நிலையில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. படைகளைவாபஸ் வாங்குமாறு இந்தியாவிடம் வற்புறுத்தி வந்த புஷ்சுக்கு இந்தியா கடந்த வாரம் தெளிவான பதிலைத்தந்துவிட்டது.
இந்தியாவில் நடக்கும் மதக் கலவரத்தில் கூட பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்புள்ளதாக அமெரிக்காவிடம்விளக்கிய இந்திய அதிகாரிகள், எங்களை விட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு அறிவுரை கூறுவது தான் சரியாக இருக்கும்என்று கூறிவிட்டனர்.
அதே போல பாகிஸ்தானின் செயல்களில் மாற்றம் வராதவரை எல்லையில் குவித்துளள படைகளை வாபஸ் வாங்கமாட்டோம் என புஷ்ஷிடம் இந்தியா திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
அதே போல அமெரிக்க நிருபர் பாகிஸ்தானில் கடத்திச் செல்லப்பட் கொல்லப்பட்டதும் அந் நாட்டின் பார்வையைமாற்றியுள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் அதிபரிடம் புஷ் நேரில் தொலைபேசியில் இது குறித்துப் பேசினார். தீவிரவாதிகளைஅனுப்புவதை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு உரிய சூழ்நிலையை உருவாக்க முயற்சி மேற்கொள்ளுமாறுஅறிவுறுத்தினார்.
சர்வதேச அளவில் தீவிரவாதம் குறித்த கருத்துக்கள் மாறிவிட்டதை பாகிஸ்தான் உணர வேண்டும் என்று கூறியபுஷ், இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதை இனியும் அமெரிக்கா பார்த்துக் கொண்டிருக்காது என்றுகூறியுள்ளார் என அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரியொருவர் வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறினார்.
தீவிரவாதிகள் விஷயத்தில் அமெரிக்காவின் கருத்தை ஏற்றுக் கொண்ட முஷாரப் நடவடிக்கை எடுப்பதாகவும்உறுதியளித்துள்ளார்.
நாங்கள் முஷாரபின் உறுதிமொழியை நம்புகிறோம். நடவடிக்கை எடுத்தால் முஷாரபுக்கு நல்லது, இதில் அவர்ஏதாவது அரசியல் விளையாட்டில் ஈடுபட்டால் அவர் பிரச்சனையில் சிக்குவார் என்றும் அந்த அதகாரி கூறினார்.
சார்க் அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜை பிரதமர் வாஜ்பாய் அனுப்பிவைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார் அந்த அதிகாரி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications