பச்சைக் குழந்தைக்கு விஷம் கொடுத்த தந்தை
சேலம்:
சேலம் அருகே 3வதாக பிறந்த குழந்தைக்கு விஷம் கொடுத்தார் அதன் தந்தை. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் உயிருக்குப் போராடி வருகிறது பிறந்து 25 நாளே ஆன அந்த பிஞ்சு.
முன்பெல்லாம் ஆண்டிப்பட்டியில் தான் பெண் சிசுக் கொலைகள் அதிகம் நடக்கும். ஆனால் தற்போது சேலம்,தருமபுரி மாவட்டங்களில் இந்த சிசுக் கொலைகள் அதிகம் நடந்து வருகின்றன.
பெண் குழந்தை வேண்டாம் என்றும் நினைக்கும் பெற்றோர் சிலர் அந்த பெண் சிசுக்களுக்கு கள்ளிப் பாலைகொடுத்து கொன்று விடுகின்றனர். இதனால் தமிழக அரசு, அரசு தொட்டில் என்ற திட்டத்தை ஏற்படுத்தியது.
இதனால் பெண் சிசுக் கொலைகள் பெரிதும் குறைந்து வருகிறது. பெண் குழந்தை வேண்டாம் என்று நினைக்கும்பெற்றோர் இந்த அரசு தொட்டிலில் குழந்தையை போட்டு விடுகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு இடைப்பாடி அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்த பழனி, வளர்மதி தம்பதிகளுக்கு3வதாக ஆண் குழந்தை பிறந்து 10 நாளில் மர்மமான முறையில் இறந்தது.
இது குறித்து அந்த கிராம மக்கள் தாசில்தாருக்கு புகார் கொடுக்கவே அந்த குழந்தையின் உடல் தோண்டிஎடுக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதே போன்ற ஒரு சம்பவம் சின்னசேலம் அருகே நடந்துள்ளது. சின்னசேலம் அருகேதென்செட்டியனூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேசன் (29). இவரது மனைவி விமலா (21).
இவர்களுக்கு வெங்கடேஷ் (3), சின்ராஜ் (2) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 25 நாட்களுக்குமுன் இவர்களுக்கு 3வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தை பிறந்ததில் இருந்தே இவன் எதுக்குப் பிறந்தான்(?), இவனை நான் கொலை செய்து விடுவேன்மாதேசன் பயமுறுத்தி வந்தார். வெள்ளிக்கிழமை காலை குடிபோதையில் வந்த அவர், வீட்டில் இருந்த பூச்சிமருந்தை எடுத்து அந்த குழந்தைக்கு ஊட்டியுள்ளார்.
இதனால் குழந்தை மயக்கமடைந்துள்ளது. அங்கு வந்த விமலா அதிர்ச்சியடைந்து, உடனடியாக ஆத்தூர் அரசுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு போனார். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு சேலம் அரசுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தை பெற்றுக் கொள்வதைத் தடுக்க எத்தனையோ வழிகள் இருந்தும அதையெல்லாம்விட்டு மனைவியையும்கர்ப்பமாக்கி, அவரை 10 மாதம் சுமக்க வைத்து பின்னர் பிறந்த குழந்தையை கொல்ல முயற்சித்திருக்கிறார் இந்தத்தந்தை.
இந்தக் கொலைகாரனை எந்தக் கணக்கில் சேர்ப்பது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications