அயோத்தி: ரிசர்வ் போலீசார் கொடி அணிவகுப்பு
அயோத்தி:
அயோத்தியில் பதற்றத்தைத் தணிப்பதற்காக அங்கு மத்திய ரிசர்வ் போலீசார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடிஅணிவகுப்பு நடத்தினர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக சங்கராச்சாரியார் இரு தரப்பினரிடையேயும் நடத்தியபேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதைத் தொடர்ந்து வரும் மார்ச் 15ல் அயோத்தியில் பிரச்சனைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கானபூமி பூஜை நடத்தப்படும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்துள்ளது.
ஆனால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை அயோத்தியில் பூமி பூஜை நடத்த அனுமதிக்க முடியாது என்று பிரதமர்வாஜ்பாய் கூறியுள்ளார். இந்நிலையில் அயோத்தியில் பூமி பூஜை நடக்காவண்ணம் தடுப்பதற்காக அயோத்திமற்றும் கரசேவர்கள் குவிந்துள்ள கரசேவக்புரம், ராம்சேவக்புரம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.
அயோத்தி நகர் முழுவதும் மற்றும் கரசேவர்கள் குவிந்துள்ள கரசேவக்புரம், ராம்சேவக்புரம் ஆகிய பகுதிகளில்இன்று அடையாளக் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மேலும் 150 ரோந்து வண்டிகளில் மத்திய ரிசர்வ் போலீசாரும், உத்தர பிரதேச போலீசாரும் இயந்திரதுப்பாக்கிகளுடன் அயோத்தியை சுற்றி கண்காணித்து வருகின்றனர்.
பாபர் மஸ்ஜித் கமிட்டி தலைவர் கைது
இதற்கிடையே டெல்லியில் இருந்து அயோத்திக்கு ரத யாத்திரை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்த பாபர்மஸ்ஜித் கமிட்டியின் தலைவர் முகமுது யூனுஸ் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
மார்ச் 15ம் தேதி அயோத்தியில் பூமி பூஜை நடத்தப்படும் என்று வி.எச்.பி.யினர் அறிவித்ததை எதிர்த்து பாபர்மஸ்ஜித் கமிட்டி டெல்லியிலிருந்து, அயோத்திக்கு ரத யாத்திரை மேற்கொள்ளும் என்று சித்திக் அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு, தெற்கு டெல்லியில் உள்ள ஜாகீர் நகரில் உள்ள வீட்டில் சித்திக் கைதுசெய்யப்பட்டார். நாட்டில் அமைதியை நிலை நாட்டுவதற்கும், மதக்கலவரம் நடக்காமல் தடுப்பதற்காகவும் இவர்கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் கூறினர்.
போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
இதற்கிடையில் மேற்கு வங்காளத்தில் சனிக்கிழமை இரவு வி.எச்.பி.யினர் யஜ்ன பூஜை நடத்த போலீஸ்அனுமதிக்காததை தொடர்ந்து போலீசுக்கும், வி.எச்.பி.யினருக்கும் நடந்த மோதலில் ஒருவர் பலியானார். மேலும்12 பேர் காயமடைந்தனர்.
மேற்கு வங்காளத்தில் தால்திக் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஹரிசபா மந்திர் கோவில் அருகில் யஜ்ன பூஜைநடத்துவதற்காகவும், தர்ம சபாவை ஏற்படுத்துவதற்காகவும் 4,000 விஸ்வ ஹிந்து பரிசத்தினர் கூடினர்.
ஆனால் அவர்களை மொத்தமாக அனுப்பாமல், ஒவ்வொருவராக போலீசார் கோவிலுக்குள் அனுமதித்தனர்.அதனால் மற்றவர்கள் தரையில் அமர்ந்து ஜெய் ராம் என்று கோஷம் எழுப்பினர்.
இதனால் அவர்களை போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் கலைக்க முற்பட்டனர். ஆனால் அவர்கள் போலீசார்மீது கல்லெறிந்தனர். இதனால் போலீசார் 20 ரவுண்டுகள் சுட்டனர். இந்த போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர்பலியானார்.
மேலும் 7 போலீசார் உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 5 பேர் பங்குர் மருத்துவமனையிலும்,மற்றவர்கள் கேனிங் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனல் அந்த பகுதியில் பஸ் போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்குதற்போது அமைதி திரும்பியிருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications