குஜராத் அரசுக்கு அத்வானி தொடர்ந்து ஆதரவு
டெல்லி:
குஜராத்தில் வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறிய மாநில முதல்வர் நரேந்திர மோடி அரசை நீக்க முடியாது எனஉள்துறை அமைச்சர் அத்வானி ராஜ்யசபாவில் கூறினார்.
அதே போல நரேந்திர மோடியை ஆதரிக்கும் நானும் பதவி விலக முடியாது என்றார். இதையடுத்து எதிர்க்கட்சியினர் ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க் கட்சிகளோடு சேர்ந்து தெலுங்கு தேசம் கட்சியும் பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்தது.
முன்னதாக ராஜ்யசபாவில் எதிர்க் கட்சியினர் நரேந்திர மோடியை நீக்க வேண்டும், அத்வானியும் பதவி விலகவேண்டும் எனக் கோரினர். இதற்கு பதிலளித்து அத்வானி 45 நிமிடங்கள் பேசினார்.
அவர் கூறுகையில், காந்தி பிறந்த மண் குஜராத். அங்கு போலீஸ் தீவிரவாதிகள் போல செயல்பட்டதாகவும்,போலீசார் ஒருதலைப் பட்சமாகவும் எதிர்க் கட்சிகள் பொத்தாம்பொதுவாக புகார் கூறுவதை ஏற்க முடியாது.
இது குறித்து மாநில அரசு நியமித்துள்ள நீதி விசாரணை நடக்கிறது. விசாரணை அறிக்கை வந்தவுடன் தவறு செய்தஅதிகாரிகள், போலீஸ் ஆதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வன்முறை பா.ஜ.கவுக்கே ஒருகரும்புள்ளி தான்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரிக்க முடியாது என்றார்.
ரயில் எரிப்பு நடந்தவுடன் மத்தியப் படைகளை ஏன் அனுப்பவில்லை என்று கேட்ட காங்கிரஸ் எம்.பி. அகமத்படேல், அங்கு வன்முறை பரவ வேண்டும், பஜ்ரங் தள், வி.எச்.பி. ஆகியவை கொலைகளைச் செய்ய வேண்டும்என்று மத்திய அரசு விரும்பியது தான் காரணம்.
இறந்தவர்களில் கூட இந்துக்களுக்கு ஒரு நஷ்ட ஈடும், முஸ்லீம்களுக்கு ஒரு நஷ்டஈடும் அறிவித்து தனது மதவாதபுத்தியை, தனது உண்மையான நிறத்தை பா.ஜ.க. காட்டிவிட்டது என்றார்.
ஆனால், வெட்கமில்லாமல் மத சார்பற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரித்தால் தான் இதில் உண்மை வெளிவரும். கிரிமினல் குஜராத் அரசுநியமித்துள்ள நீதிவிசாரணையால் பயன் இருக்காது என்றார்.த்
ஸ்டார் டிவி நிருபர்களை மிரட்டிய கும்பல்:
காங்கிரஸ் மூத்த தலைவர் பிரயரஞ்சன் தாஸ்முன்ஷி கூறுகையில்,
முதல்வர் நரேந்திர மோடியைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய என்.டி.டி.வி-ஸ்டார் டி.வி, நிருபர்களைக் கூட மதவாதக்கும்பல் விடவில்லை. அவர்களது காரை சூழ்ந்து கொண்ட வி.எச்.பி., பஜ்ரங் தள் கும்பல் காரில் முஸ்லீம் நிருபர்அல்லது கேமராமேன் இருக்கிறாரா என்று கேட்டுள்ளது.
பின்னர் அவர்களை ஜெய் ஸ்ரீ ராம் என்று கூற நிர்பந்தித்துள்ளது. அவர்களில் யாராவது அதைக்கூறியிருக்காவிட்டால் முஸ்லீம்கள் என்று சொல்லி அவர்களை அக் கும்பல் கொன்றிருக்கும். அவர்களின்அடையாள அட்டைகளை எல்லாம் வாங்கி பார்த்துவிட்டுத் தான் அவர்களை உயிருடன் விட்டிருக்கிறது அந்தக்கும்பல்.
இதனால் குஜராத்தில் இருந்து தனது முஸ்லீம் ரிப்போர்டர்களை திரும்ப அழைத்துக் கொண்டுவிட்டது ஸ்டார் டி.வி.
காந்தி நகரில் முதல்வரை சந்தித்து விட்டு வந்த ஸ்டார் டிவி நிருபர்களுக்கே இந்த கதி என்றால் அம் மாநிலத்தில்சாதாரண மக்களுக்கு என்ன கதி நேர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நான் விளக்க வேண்டியதில்லை.
இது தான் பா.ஜ.க. அரசு நடத்தும் லட்சணம். இதைவிடக் கேவலமாக ஒரு மாநில அரசு செயல்பட முடியாது என்றுகூறிய அவர் குஜராத் அரசை உடனே நீக்க வேண்டும் என்றார்.
தெலுங்கு தேசமும் கண்டனம்:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியும் குஜராத் அரசை மிகக் கடுமையாக விமர்சித்தது.இக் கட்சியின் எம்.பி. ராமச்சந்திரய்யா கூறுகையில்,
வன்முறைக் கும்பலுடன் அரசே கைகோர்த்துக் கொண்ட சம்பவம் வரலாற்றிலேயே இதுவரை நடந்ததில்லை.
இன்று முஸ்லீம்களிடையே அச்சம் பரவிக் கிடக்கிறது. இதனால், அவர்கள் ஒன்றாகி வருகிறார்கள். இதைப் பார்த்துநாம் (பெரும்பான்மையினரான இந்துக்கள்) பொறாமைப்படுவதில் அர்த்தமில்லை. பாதுகாப்பில்லாத நிலைஇருந்தால் எந்த இனமும் ஒன்று சேர்வது இயற்கை தான் என்றார்.
ஆளும் கூட்டணியில் இருந்தாலும் கூட தெலுங்கு தேசம் இந்த விவாதத்தில் பங்கேற்று தனது கருத்தை தைரியமாய்எடுத்துக் கூறியது. ஆனால், அறிக்கைப் புலிகளான நம் ஊர் கட்சிகள் இந்தப் பிரச்சனையில் வாயே திறக்காமல்அமர்ந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications