இஸ்ரேல் தாக்குதல்: அராபத் வீடு, அலுவலகம் தரைமட்டம்
காஸா:
இஸ்ரேல் ராணுவ ஹெலிகாப்டர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் காஸா நகரில்உள்ள பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அராபத்தின் வீடு மற்றும் அலுவலகம் ஆகியவை இடிந்துதரைமட்டமாயின.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே கடந்த 17 மாதங்களாகத் தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.
இதில் 1,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும், 300க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் ஜெருசலேம் நகரில் இஸ்ரேல் பிரதமரான ஏரியல் ஷரோன் வீட்டுக்கு அருகே பாலஸ்தீனதற்கொலைப் படையைச் சேர்ந்த ஒரு நபர், தன் உடலில் வெடிகுண்டைக் கட்டிக் கொண்டு அதை வெடிக்கச்செய்தான்.
இச்சம்பவத்தில் அந்நபர் உள்பட 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள்படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்திற்கு ஹமாஸ் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதேபோல் இஸ்ரேலின் மற்றொரு நகரமான நேட்டான்யாவிலும் பாலஸ்தீனியர்கள் கண்மூடித்தனமாகதுப்பாக்கியால் சுட்டதில் ஒரு குழந்தை, ஒரு பெண் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலை நடத்திய பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் போலீசார் துரத்திச் சென்று சுட்டுக் கொன்றனர்.
இந்த 2 தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, காஸாவில் உள்ள அராபத்தின் அலுவலகத்தை நேற்றுஇஸ்ரேலின் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஏவுகணைகளை வீசித் தகர்த்தன.
இந்த பயங்கரமான தாக்குதலில் அராபத்தின் அலுவலகம் முழுவதுமாக இடிந்து விழுந்தது. இந்தக்கட்டடத்துக்குள்தான் அவருடைய வீடும் இருந்தது.
ஆனால் தாக்குதல் நடந்தபோது அராபத் அங்கு இல்லாத காரணத்தால், அவர் உயிர் தப்பினார்.
-
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications