காப்பகத்திலிருந்து தப்பி தங்களைக் காத்துக் கொண்ட குழந்தைகள்
சென்னை:
கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டதால் சென்னை அருகே ஒரு காப்பகத்திலிருந்த 6 குழந்தைகள்அங்கிருந்து தப்பியோடினர்.
கார் பந்தயங்களுக்குப் புகழ் பெற்ற சோழவரம் அருகே உள்ளது சாரதா காப்பகம். இந்தக் காப்பகத்திலிருந்து 6குழந்தைகள் திடீர் என காணாமல் போய்விட்டனர்.
இந்நிலையில் இந்த 6 குழந்தைகளும் அருகிலுள்ள கிராம மக்களால் திருவள்ளூர் பகுதி இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் செயலாளர் ஜானகிராமனிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர் சோழவரம்போலீஸாரிடம் அக்குழந்தைகளை ஒப்படைத்தார்.
குழந்தைகளிடம் விசாரித்தபோது, காப்பகத்தை நடத்தி வரும் அருளானந்த சுவாமிகள், குழந்தைகளுக்குகடுமையான வேலைகள் கொடுத்ததாக தெரிய வந்தது.
இதனால் மீண்டும் அந்தக் காப்பகத்திற்குப் போக மாட்டோம் என்றும் அந்தக் குழந்தைகள் கதறி அழுதுள்ளனர்.
இதையடுத்து அவர்களது பெற்றோர் குறித்து விசாரித்து அறிந்த போலீஸார் அவர்களிடம் குழந்தைகளைஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications