ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று தொடக்கம்
சென்னை:
தமிழக சட்டசபையில் ஆளுநரின் உரை மீதான விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த சனிக்கிழமை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர்ராமமோகன் ராவ் அரசின் திட்டங்கள் அடங்கிய உரையைப் படித்தார்.
இந்த உரையை திமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் புறக்கணித்து, சபையை விட்டு வெளிநடப்புசெய்தன. ஆளுநர் உரைக்குப் பின் சபை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் திங்கள்கிழமை மறுபடியும் சபை கூடியது. அப்போது மக்களவை சபாநாயகர் பாலயோகி உள்ளிட்டமறைந்த எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு இரங்கல் தெரிவித்து சபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆளுநரின் உரை மீதான விவாதம் சபையில் தொடங்குகிறது.
கருணாநிதியின் சேப்பாக்கம் தொகுதி அலுவலகம் மீதான தாக்குதலை சபையில் பெரிதுபடுத்த திமுகதிட்டமிட்டுள்ளதாகத் தெகிறது. இதுதொடர்பாக சூடான விவாதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால் சபைக்கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுக்கிடையே அதிமுக அரசை ஆதரிப்பது தொடர்பாக பூசல்ஏற்பட்டுள்ளது. சுமார் 15 எம்.எல்.ஏக்கள் அதிமுகவை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர். இதுவும் இக்கட்சிஉறுப்பினர்களிடையே பூசலைக் கிளப்பி, அது சபையில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியினரும் ஆளுநர் உரை குறித்து அதிருப்தி தெவித்துள்ளனர். எனவே இன்று தொடங்கும்சபையில் அனல் பறக்கும் என்று தெரிகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications