ராஜ்யசபா தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்
சென்னை:
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று (புதன்கிழமை) தங்களுடையவேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
வரும் 27ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்திலிருந்து 6 ராஜ்யசபா எம்.பிக்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர்.
அதிமுக சார்பில் முன்னாள் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏவான தங்கத் தமிழ்செல்வன், டான்சி வழக்கில் வாதாடியவழக்கறிஞர் ஜோதி, சீ. பெருமாள் மற்றும் எஸ்.பி.எம். சையது கான் ஆகியோர் ராஜ்யசபா எம்.பி. தேர்தலில்போட்டியிடுகின்றனர்.
இந்த நான்கு பேரும் இன்று தங்களுடைய வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். சென்னை தலைமைச்செயலகத்தில் தேர்தல் அதிகாரி ஜானகிராமனிடம் இவர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
அப்போது முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் துரைசாமி உள்பட ஏராளமான அதிமுகஎம்.எல்.ஏக்களும் நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
ராஜ்யசபா தேர்தலில் தமாகா சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசனும், திமுக சார்பில்போட்டியிடும் வழக்கறிஞர் சண்முகசுந்தரமும் கடந்த திங்கள்கிழமை தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல்செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாள் என்ற நிலையில், இந்த ஆறு பேரைத் தவிர இரண்டுசுயேச்சைகளும் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications