அயோத்தியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு
அயோத்தி:
கோவில் கட்ட பூஜை நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தி வரும் நிலையில்அயோத்தியை நோக்கி வி.எச்.பி, பஜ்ரங் தள் மற்றும் பிற கர சேவகர்கள் சென்ற வணணம் உள்ளன.
பல மாநிலங்களில் அயோத்தி செல்லும் கர சேவகர்களை தடுக்கப்பட்டு ரயில் நிலையங்களிலேயே திருப்பிஅனுப்பப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் பிற வழிகளில் அவர்கள் அயோத்திக்குள் வந்தவண்ணம் உள்ளனர்.
இதனால் அயோத்தியில் மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ள 84 கம்பெனி மத்தியப் படைகள் அங்குநிறுத்தப்பட்டுள்ளன. ராணுவமும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. 1,000 போலீசாரும்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று அம் மாநில ஆளுநர் விஷ்ணுகாந்த் சாஸ்திரி பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து மாநிலத்தில் சட்டம்-ஒழுங்குநிலை குறித்து விளக்கினார். ராணுவ உதவியும் கோரினார்.
அயோத்தியில் கிட்டத்தட்ட எங்கு நோக்கினும் போலீஸ், மத்தியப் படைகள் தான் உள்ளன. மக்களைவிடபாதுகாப்புப் படையினர் தான் அதிக அளவில் தான் உள்ளனர்.
மக்களை கூட விடாமல் படையினர் தடுத்து வருகின்றனர். பிரதமர் வாஜ்பாயே அயோத்தி பாதுகாப்பு நிலையைநேரடியாகக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. தனது சார்பில் ஒரு பார்வையாளரையும் அவர்அயோத்திக்கு அனுப்பி வைத்து பாதுகாப்புப் பணியை கண்காணித்து வருகிறார்.
உத்தரப் பிரதேசத்தின் டி.ஜி.பி. உள்ளிட்ட மூத்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் அயோத்தி வந்துவிட்டனர்.
சைக்களில் செல்பவர்கள் கூட சோதனையிடப்படுகின்றனர். பிரச்சனைக்குரிய இடத்தின் அருகே வாகனங்கள்செல்லத் தடை விதிக்கப்பட்டுவிட்டது.
நடந்து செல்வபவர்களின் பைகள் கூட சோதனையிடப்படுகின்றன. நேற்று சிவராத்திரி பூஜைகள் கூட பலத்தபாதுகாப்புடன் தான் நடந்தன. கடந்த ஆண்டு 2 லட்சம் மக்கள் வந்து பூஜை நடத்தினர். ஆனால், நேற்று வெறும்3,000 பேர் தான் வந்திருந்தனர்.
வன்முறை பயம் காரணமாக மக்கள் பெருமளவில் வரவில்லை என்று தெரிகிறது. மேலும் அயோத்தி வரும் ரயில்,பஸ்கள் கூட குறைக்கப்பட்டுவிட்டதாலும் கூட்டம் அதிகமில்லை என்று தெரிகிறது. ரயில் நிலையத்தில் இறங்கும்பயணிகளில் கர சேவகர்கள் உடனடியாக போலீஸ் வேன்கள் மூலம் திருப்பி அனுப்பபப்ட்டு விடுகின்றனர்.
இந் நிலையில் உச்சநீதிமன்றம் என்ன மாதிரியான தீர்ப்பு வழங்கும் என்பதிலும் சட்ட நிபுணர்களிடையே இருவேறுகருத்துகள் நிலவுகின்றன.
பூஜை நடத்த அனுமதி கோரப்படுவது பிரச்சனைக்குள்ளாகாத நிலத்தில் தான் என்பதால் அனுமதி கிடைக்கும் எனஒரு பிரிவு சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வழக்கு விசாரணை காலை 10.35 மணிக்குத் தொடங்கியது.
ஆனால், அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்ட இடத்தின் அருகே உள்ள நிலத்திலும் தான் எந்தவிதமானநடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என 1994ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, பூஜை நடத்தஅனுமதி கிடைக்காது என இன்னொரு பிரிவினர் கூறுகின்றனர்.
இந்தப் பூஜைக்காக இருந்து அயோத்திக்கு வந்து கொண்டிருந்த கரசேவகர்கள் அடங்கிய ரயில் குஜராத்தில்எரிக்கப்பட்டதில் தான் 58 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து குஜராத் கலவரத்தில் 650 பேர் கடந்த வாரம்உயிரிழந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications