பூஜை நடத்த அனுமதிக்கலாம்: மத்திய அரசு வழக்கறிஞர் வாதம்
டெல்லி:
அயோத்தியில் கோவில் கட்ட பூமி பூஜை நடத்த அனுமதி தரலாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுதெரிவித்துள்ளது.
இதன்மூலம் அயோத்தி விவகாரத்தில் வி.எச்.பிக்கு ஆதரவான நிலையை மத்திய பா.ஜ.க. அரசு எடுத்துள்ளது.
பூமி பூஜை நடத்தலாமா இல்லையா என்பது குறித்த வழக்கு விசாரணை இன்று காலை நீதிமன்றத்தில் தொடங்கியது.
விசாரணை தொடங்கியவுடன் முதலில் அரடுத் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் சோலி சோராப்ஜியைஅழைத்த நீதிபதிகள் அயோத்தியில் அமைதியை நிலை நாட்ட மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?என்று கேட்டனர்.
இதற்கு சோராப்ஜி பதிலளிக்கையில்,
அயோத்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அரசியல் சட்டம் 144வது பிரிவின் கீழ் அங்குதடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச போலீஸ் தவிர 2,000 பாரா மிலிட்டரிப் படைகளும்குவுக்கப்பட்டுள்ளன.
அங்கு பூமி பூஜை நடத்த அனுமதிக்கலாம். பூஜை நடத்தப்பட்டால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க அரசுபோதிய ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்து (பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம்) 300 மீட்டர் தொலைவில் உள்ளசர்ச்சைக்குள்ளாகாத நிலத்தில் 3 மணி நேரம் பூமி பூஜை நடத்த அனுமதி தரலாம். அங்கு 60 முதல் 70 சாதுக்கள்தான் பூஜை செய்வர். கர சேவகர்கள் யாரும் பூஜையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இதற்குத் தேவையான பாதுகாப்புப் போடப்படும். சாதுக்கள் தவிர யாரையும் உள்ளே விடமாட்டோம். கரசேவகர்கள் தூரத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியை பார்க்க மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவர்களின் எண்ணிக்கை கூட 1000க்கும் மேல் தாண்டாமல் பார்த்துக் கொள்வோம்.
அவர்களை 25 பேர் கொண்ட குழுக்களாக உள்ளே அனுப்புவோம். ஆனால், சூலாயுதம் போன்றவற்றை எடுத்துச்செல்ல அனுமதிக்க மாட்டோம்.
பூஜைக்கு அனுமதி தந்தாலும் கூட சிலை தானம் தருவது போன்ற செயல்கலைச் செய்யவும், கோவில் கட்டும்தூண்களை உள்ளே கொண்டு செல்லவும் அரது அனுமதி தராது.
சர்ச்சைக்குரிய நிலத்தில் தான் யாரும் எதையும் செய்யக் கூடாது என்று 1994ல் உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும்அலகாபாத் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகளிலும் இந்த சர்ச்சைக்குள்ளாகாத நிலம் குறித்து எந்த சர்ச்சையும்இல்லை என்றார்.
அப்போது இடைமறித்த நீதிபதிகள், 1994ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடத்திலும்,அரசு கையகப்படுத்திய இடத்திலும் எந்தவிதமான கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்ற உத்தரவுஇருக்கிறதே. அப்படி இருக்கும்போது எப்படி பூமி பூஜை நடத்த முடியும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கடைபிடிக்கவேண்டிய அரசியல் சட்டக் கடமை மத்திய அரசுக்கு உள்ளதே என்று கேட்டனர்.
இதற்கு சோரப்ஜி எந்த பதிலும் அளிக்கவில்லை. பூஜை நடத்தக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டால் அதைமத்திய அரசு நிச்சயம் மதித்து நடக்கும் என்று கூறிவிட்டு தனது வாதத்தை முடித்துக் கொள்வதாகக் கூறிவிட்டுஅமர்ந்தார். இதன் பின்னர் தான் பூஜைக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இன்று 3 ரிட் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
பூஜையைத் தடை செய்யக் கோரியும் வி.எச்.பி. தொண்டர்கள் அயோத்தியில் நுழைவதை தடை செய்யக் கோரியும்முகம்மத் அஸ்லம் பூரே தாக்கல் செய்த மனு முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிபதிகள் பி.என். கிர்பால், ஜி.பி. பட்டனாயக், வி.என். காரே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கைவிசாரித்தது.
இது தவிர கரசேவகர்கள் பூஜை நடத்த அனுமதி கோரி ரவீந்திர குப்தா தாக்கல் செய்துள்ள மனு, அயோத்தியில்கோவிலையும் மசூதியையும் ஒரே நேரத்தில் கட்டவும அதற்காக ஒரு குழுவை அமைக்கவும் கோரி ஐக்கியவழக்கறிஞர்கள் சங்கம் தாக்கல் செய்துள்ள மனு ஆகிய மூன்று ரிட் மனுக்களையும் நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications