அயோத்தியில் பூஜை நடத்த உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி:
அயோத்தியில் எந்தவிதமான பூஜை நடத்தவும் அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
1994ம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் கடை பிடிக்க வேண்டும். இந்தப் பிரச்சனைக்குஇறுதித் தீர்ப்பு வரும் வரை அங்கு எந்தவிதமான கட்டுமானப் பணியும் நடத்தக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
அயோத்தி ராமச்சந்திரபுரத்தில் பிளாட் எண் 159 மற்றும் 160ல் உள்ள 67.73 ஏக்கர் நிலத்தில் எந்தவிதமானபூஜையும், சிலை தானம் வணங்கும் நிகழ்ச்சியும் நடத்தத் கூடாது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அடுத்தத் தீர்ப்புவழங்கும்வரை அங்கு எந்தப் பணியும் நடக்க விடாமல் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.
மேலும் இந்த வழக்கு விசாரணையை 10 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:
சர்ச்சைக்குரிய நிலத்திலும், அரசு கையப்படுத்தியுள்ள நிலத்திலும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்று தெள்ளத் தெளிவாக 1994ம் ஆண்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதில் எந்த மாற்றமும இல்லை.
நாங்கள் அடுத்த தீர்ப்பு தரும் வரை கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருந்து எந்தப் பகுதியையும் எக்காரணத்திற்காகவும் யாரிடமும் மத்திய அரசு தரக் கூடாது. தனது கண்காணிப்பில் தான் வைத்திருக்க வேண்டும்என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications