பூஜைக்கு அரசு ஆதரவு: நாடாளுமன்றம் ஸ்தம்பித்தது
டெல்லி:
அயோத்தி விவகாரத்தில் எந்த மதத்தினருக்கும் ஆதரவு தராமல் நடுநிலை வகிக்க வேண்டிய மத்திய அரசுவி.எச்.பி. ஆதரவாக பூஜை நடத்த அனுமதி தர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கோரியதைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்தனர்.
லோக் சபாவில் இது குறித்து பதில் கூற மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி எழுந்தபோது அவரை சத்தமிட்டுஉட்கார வைத்தனர். பிரதமர் வாஜ்பாய் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரிகோஷமிட்டனர்.
இதனால் நாடாளுமன்றம் இரண்டாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக காலையில் லோக் சபாவும் ராஜ்யசபாவும் கூடியதும் நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர் பேசியவிவரத்தைத் தெரிந்து கொண்ட எதிர்க் கட்சியினர் பா.ஜ.க. அரசு தனது மதவாதத்தைக் காட்டிவிட்டதாகக் குற்றம்சாட்டினர். காங்கிரஸ், சமாஜ்வாடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தள் உள்ளிட்டகட்சிகள் லோக் சபாவிலும் ராஜ்யபாவிலும் பெரும் அமளியில் ஈடுபட்டன.
அவையின் மையப் பகுதியில் கூடிய எதிர்க் கட்சி எம்.பிக்கள் பிரதமர் வெட்கப்பட வேண்டும், ஜனநாயகத்தையும்மதசார்பின்மையையும் கொன்ற இந்த அரசு வெட்கித் தலை குனிய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
வழக்கமாக காலையிலேயே அவைக்கு வந்துவிடும் பிரதமர் வாஜ்பாய் இன்று காலை வரவில்லை. வி.எச்.பியைஆதரித்ததால் எதிர்க் கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதால் பிரதமர் வரவில்லையா என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி கேளவி எழுப்பினார்.
சாட்டர்ஜி மற்றும் சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுடன் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்பிரமோத் மகாஜன் வாக்குவாதத்தில் இறங்கினார்.
அப்போது லோக்சபாவுக்குள் நுழைந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அவரது கட்சி எம்பிக்கள் உச்சநீதிமன்றத்தில் வி.எச்.பியை மத்திய அரசு ஆதரித்த விவரத்தை எடுத்துக் கூறினர்.
எதிர்க் கட்சி எம்.பிக்களுக்கு போட்டியாய் பா.ஜ.க. எம்.பிக்களும் பதிலுக்கு கோஷம் எழுப்பினர். ஜெய் ராம்கோஷம் எழுப்பிய அவர்கள் பூஜையை நடத்தியே தீருவோம் என்று கூறினார்.
இதனால் அவையில் ஒரே கூச்சல் நிலவியது. இதையடுத்து அவையை ஒத்தி வைத்தார் துணை சபாநாயகர் சயீத்.ராஜ்யசபாவிலும் இதே நிலை தான் நிலவியது. இதனால் அதுவும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து இரு அவைகளும் 2 மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டன.
பிற்பகலில் இரு அவைகளும் மீண்டும் கூடியதும் பிரதமர் வாஜ்பாய் அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனக் கோரிகோஷமிட்டனர். அருண் ஜேட்லி பேச ஆரம்பித்தபோது அவரிடம் போன சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், நாட்டை மோசடி செய்ய ஆரம்பித்துவிட்ர்களா?. அவர் தான் பேச வேண்டும். உங்கள் கருத்தெல்லாம்யாருக்கும் தேவையில்லை என்றார்.
அத்வானியுடன் முதல் வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் வாஜ்பாய் இதையெல்லாம் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார்.
மத்திய அரசு எடுத்த இந்த நிலை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மதசார்பற்ற கட்சிகளான திமுக,தெலுங்கு தேசம், திரிணமூல் காங்கிரஸ், லோக்தந்ரிக் ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கும் அதிர்ச்சியளித்துள்ளதாகத்தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications