பூஜைக்குத் தடையா, தூண் தானம் செய்வேன்!
அயோத்தி:
அயோத்தியில் நான் கோவில் தூணை தானம் செய்யும் நிகழ்ச்சியை நடத்துவேன் என ராமஜென்ம பூமிஅறக்கட்டளையின் தலைவர் ராமச்சந்திர தாஸ் பரமஹம்ஸ் கூறியுள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்திலும், அரசு கையகப்படுத்தியுள்ள நிலத்திலும் பூஜை நடத்துவது உள்ளிட்டஎந்த செயலையும் செய்ய உச்ச நீதிமன்றம் இன்று தடை விதித்தது.
ஆனால், இந்தத் தீர்ப்பு வந்த பின்னர் நிருபர்களிடம் பேசிய ராமச்சந்திர தாஸ்,
கோவில் கட்டவும் பூஜை நடத்தவும் தான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கோவில் கட்டுவதற்காக தயார்செய்யப்பட்டுள்ள தூண்களை தானம் செய்வதைத் தடை செய்யவில்லை.
எனவே, நான் வரும் 15ம் தேதி திட்டமிட்டபடி கல்லை (தூண்களை) தானம் செய்ய அந்த நிலத்துக்குச் செல்வேன்.எதுவரை அனுமதிக்கப்படுகிறேனோ அந்த இடம் வரைதான் செல்வேன். நான் தடுக்கப்படும் இடத்தில்நின்றுவிடுவேன். மீறிச் செல்வது போன்ற செயலில் ஈடுபட மாட்டேன்.
பூஜையோ, சிலை அமைக்கும் வேலையோ செய்ய மாட்டேன். அரசின் உத்தரவுக்குக் கட்டுப்படுவேன் என்றார்.
உச்ச நீதிமன்றம் என்றால் என்ன? என்று சில நாட்களுக்கு முன்பு வரை கேட்டுக் கொண்டிருந்தவர் ராமச்சந்திர தாஸ்பரமஹம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 15ம் தேதி கோவில் கட்டுவேன், பூஜை செய்தே தீருவேன் என்று கூறிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரவை அமலாக்குவோம்: மத்திய அரசு:
இந் நிலையில் காலையில் பூஜை செய்ய வி.எச்.பிக்கு அனுமதி தர வேண்டும் என நீதிமன்றத்தில் பேசிய மத்தியஅரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதாக அறிவித்துள்ளது.
நீதிமன்றத்தை உத்தரவை அமல்படுத்தி அங்கு பூஜை ஏதும் நடத்த விடாமல் தடுப்போம் என வெளியுறவுத்துறைஅமைச்சர் ஜஸ்வந்த் சிங் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு தெள்ளத் தெளிவாக உள்ளது. அதை அரசு நிச்சயம் மதிக்கும். அமலாக்கும். இதில் இருவேறுகருத்துக்களுக்கே இடமில்லை என்றார் சிங்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications