வி.எச்.பிக்கு ஆதரவா? வாஜ்பாய்க்கு நாயுடு, பானர்ஜி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அயோத்தியில் பூஜை நடத்த வி.எச்.பிக்கு அனுமதி தர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கைவிடுத்ததை தெலுங்கு தேசம் கட்சி கண்டித்துள்ளது.

நடுநிலையாக செயல்பட வேண்டிய மத்திய அரசு வி.எச்.பிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதை ஏற்க முடியாது எனஅந்தக் கட்சி கூறியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் வி.எச்.பி. ஆதரவான நிலையை எடுக்கும் முன் எங்களுடன்பா.ஜ.கவும் பிரதமரும் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு இன்று காலை பிரதமர்வாஜ்பாயுடன் தொலைபேசியில் பேசினார். அயோத்தி விவகாரத்தில் வி.எச்.பியை கடுமையாக நடத்துமாறுகோரிய அவர் நாட்டில் சட்டம்-ஒழுங்குக்கு முக்கியத்துவம் தருமாறு கேட்டுக்கொண்டார்.

அயோத்தியில் எந்த அசம்பாவித சம்பவமும் நடந்து விடாமல் தடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

நாயுடு தனது கருத்தைத் தெரிவிப்பதில் அடக்கி வாசித்தாலும் அவரது நெருங்கிய நண்பரும் நாடாளுமன்றதெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான எர்ரன் நாயுடு கடும் வார்த்தைகளால் மத்திய அரசைக் கண்டித்தார்.

இப்போது நாட்டில் நிலவி வரும் அசாதாரணமான சூழலில் பூஜைக்கு அனுமதி தரக் கூடாது என்று கூறிக் கொண்டேஇருக்கிறோம். ஆனால், அதை காதில் வாங்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட்டிருப்பது கடுமையாககண்டிக்கத்தக்கது. நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலை நிறுத்த அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரம் குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்போம் என்றார்.

அவரது சகாவான ராமசந்திரய்யாவும் மத்திய அரசைக் கண்டித்தார். எங்கள் நிலையை உச்ச நீதிமன்றம் சரி என்றுநிரூபித்துவிட்டது என்றார் ராவ்.

எங்களை தனிமைப்படுத்தி விட்டார்கள்:

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இந்தவிவகாரத்தில் பா.ஜ.க. தனது கூட்டணிக் கட்சிகளை தனிப்படுத்திவிட்டது.

மத்தியில் நடப்பது பா.ஜ.க. ஆட்சி அல்ல. தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி. முக்கியமான இந்த விவகாரத்தில்வி.எச்.பிக்கு மத்திய அரசு ஆதரவு தெரிவித்தது கடும் கண்டனத்துக்குறியது.

எனது கட்சி எம்.பிக்கள் இரு தினங்களுக்கு முன் பிரதமரை சந்தித்தனர். அப்போது கூட வாஜ்பாய் தனது இந்தமுடிவை எங்களிடம் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து பா.ஜ.க. அரசை ஆதரிப்போமா இல்லையா என்பது குறித்துஇப்போது ஏதும் கூற விரும்பவில்லை என்றார்.

வாஜ்பாய் போன்ற ஒரு தலைவரின் கீழ் செயல்படும் மத்திய அரசு இப்படி விஸ்வ ஹிந்து பரிஷதுக்கு ஆதரவாகநீதிமன்றத்தில் பேசும் என்று கனவிலும் நான் நினைத்ததில்லை என முன்னாள் பிரதமர் சந்திர சேகர் கூறியுள்ளார்.நாட்டின் மத ஒற்றுமைக்கு இது பெரும் தீங்கு விளைவிக்கும். வாஜ்பாய் மீதான நம்பிக்கை முழுவதுமாய்பொய்த்துப் போய்விட்டது என்றார்.

இது முஸ்லீம்களுக்கு கிடைத்த வெற்றி அல்ல:

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து இந்திய முஸ்லீம் சட்ட வாரியத்தின் செயலாலர் அப்துல் ரகிம் கூறுகையில்,

இந்தத் தீர்ப்பு முஸ்லீம்களுக்கு கிடைத்த வெற்றி அல்ல. நாட்டின் சட்டத்துக்கும் நீதிக்கும் கிடைத்துள்ள வெற்றி.எங்களுக்கு இந்திய அரசியல் சட்டத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது.

நாங்கள் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். ஆனால், அரசுடன் பேசுவோம் அல்லதுமசூதி இடிப்பில் தொடர்பில்லாத அமைப்புகளுடன் பேசுவோம். மசூதியை இடித்த கும்பல்களுடன் பேசமாட்டோம்.

காஞ்சி சங்கராச்சாரியாரை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். மிக நியாயமாக பேசினார் அவர். ஆனால், கோவில்கட்ட இடத்தைத் தருவது தொடர்பாக வரைபடமோ அல்லது எழுத்துப்பூர்மான ஆவணங்களையோ அவர்தரவில்லை.

அதைத் தந்தால் இப்போது கூட பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+