கத்த வேண்டாம்.. இது நாடாளுமன்றமில்லை, கோர்ட்
டெல்லி:
இது நாடாளுமன்றம் அல்ல... நீங்கள் நித்ைதபோதெல்லாம் கூச்சல் போட. இது நீதிமன்றம் என்பதை உணர்ந்துசெயல்படுங்கள் என அயோத்தி குறித்து விசாரித்த நீதிபதிகள் எரிச்சலுடன் கூறினர்.
அயோத்தியில் பூமி பூஜை நடத்துவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றத்தில் பெரும்கூட்டம் கூடியது. வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், பொது மக்கள் என பெரும் கூட்டம் கூடி விட்டது.
இதையடுத்து விசாரணை நடந்த கோர்ட் ரூம் முட வேண்டிய நிலை ஏற்பட்டது.
நீதிபதிகள் மூவரும் வந்து அமர்ந்து வழக்கை விசாரிக்க ஆரம்பித்த பின்னரும் உள்ளே இருந்தவர்கள் சத்தம்போட்டு பேசிக் கொண்டிருந்தனர்.
இதனால் விசாரணை பாதிக்கப்பட்டது. அனைவரையும் அமைதிப்படுத்த நீதிபதிகள் எடுத்த பல முயற்சிகளும்பலனளிக்கவில்லை. அனைவரும் அமைதியாகாவிட்டால் எழுந்து போய் விடுவோம் என்று நீதிபதிகள் கூறியும்அமைதி திரும்பவில்லை.
10 நிமிடம் பொறுத்துப் பார்த்த நீதிபதிகள் கூச்சலுக்கு இடையே விசாரணையைத் தொடங்கினர். முதலில் அரசின்சார்பில் ஆஜரான சோலி சோரப்ஜி பேச ஆரம்பித்தார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது இஸ்லாமிய சட்டவாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த் (இவர் ராஜ்யசபை எம்.பியாகவும் உள்ளார்) இடைமறித்துப் பேசஆரம்பித்தார்.
அப்போது நீதிபதி தலையிட்டு, மிஸ்டர் ஆனந்த். இது நீதிமன்றம். நீங்கள் நினைத்தபோதெல்லாம் எழுந்து நின்றுஎன்ன வேண்டுமானாலும் பேச இது நாடாளுமன்றம் இல்லை என்றார்.
இதைக் கேட்ட ஆனந்த், நீதிபதிகள் உள்பட அனைவரும் சிரித்தனர்.
இதன் பின்னர் தான் அமைதி திரும்பியது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications