சட்டசபையில் திமுக, பாமக வெளிநடப்பு
சென்னை:
பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் முடிவில் மாற்றம் இல்லை என்று தமிழகமுதல்வர் ஜெயலலிதா அறிவித்ததைத் தொடர்ந்து, திமுக மற்றும் பாமக உறுப்பினர்கள் இன்று (புதன்கிழமை)சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
கடந்த சனிக்கிழமை ஆளுநர் உரையின்போது, பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூர் மாவட்டம்இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினால் கொதிப்படைந்த அரியலூர் மக்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை கடையடைப்புப் போராட்டம்நடத்தியதோடு நில்லாமல், மறுநாள் மாவட்டம் முழுவதும் பந்த்தும் நடத்தினர்.
மேலும் அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் தொடர்ந்து நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர். மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்களும்கூட போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் பெரம்பலூருடன் அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் முடிவில் மாற்றம் எதுவும் இல்லை என்றுஇன்று சட்டசபையில் ஜெயலலிதா உறுதியுடன் கூறினார்.
இதைக் கண்டித்து திமுக மற்றும் பாமகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் கோஷங்கள் எழுப்பியவாறேசட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தை அமைப்பு உறுப்பினர்களும் வெளிநடப்புசெய்தனர்.
அரியலூரில் நாளை மனித சங்கிலி போராட்டம்:
இதற்கிடையே அரியலூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகளில் கறுப்புக் கொடிகளைக்கட்டவும், நாளை மனித சங்கிலிப் போராட்டம் நடத்தவும் அரியலூரில் நடந்த ஒரு கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
மேலும் வரிகொடா இயக்கத்தை நடத்தவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழ் விடுதலை இயக்கத்தின் தலைவர் இளவரசன் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகக் கிடைத்ததகவலையடுத்து, அங்கு போலீசார் விரைந்தனர். ஆனால் அவன் அதற்குள் தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications