தமிழக மீனவர்களை மீண்டும் கடத்திய ஆந்திர ரவுடிகள்
சென்னை:
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மீனவர்களை, ஆந்தி மாநில கடல் ரவுடிகள் மீண்டும் கடத்திச்சென்று பணம் பறித்த பின் திருப்பி அனுப்பியுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த மீனவர்களை அடிக்கடி ஆந்திர மாநலத்தைச் சேர்ந்த ரவுடிகள் கடத்திச் சென்று பணம் பறித்துவருகின்றனர். இதற்கு ஒரு முடிவே இல்லாமல் போய் விட்டது.
மீனவர்கள் கடத்திச் செல்லப்படும் போதெல்லாம், சென்னை மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஆந்திராவிற்குச் சென்றுஅந்த ரவுடிகள் கேட்கும் பணத்தைக் கொடுத்து விட்டு மீனவர்களை மீட்டு வருகிறார்கள்.
கடத்தல் குறித்து போலீஸில் யாரும் புகார் கொடுப்பதில்லை என்பதால் போலீஸாரும் இதில் தலையிடுவதில்லை.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் 60க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை வழக்கம் போல ரவுடிகள் கடத்திச்சென்று விட்டனர். ராயபுரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் சென்றவர்கள் இந்த மீனவர்கள்.
தங்களது எல்லைக்குள் வந்து இம்மீனவர்கள் மீன் பிடித்ததாக வழக்கம் போல அந்த ரவுடிகள் குற்றம் சாட்டினர்.
இந்தத் தகவல் அறிந்ததும் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாட்ட மீனவர் சங்கத்தின் பிரதிநிநதிகளும்வழக்கம் போல ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணப்பட்டனத்திற்கு விரைந்தனர். அங்கு கடல்ரவுடிகளுடன் பேச்சு நடத்தி ரூ.80,000 கொடுப்பதாக ஒத்துக் கொண்டனர்.
அதன் பிறகு தமிழக மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன், வலைகள் ஆகியவற்றைப் பறித்துக் கொண்ட கடல்ரவுடிகள், மீனவர்களை மட்டும் விடுவித்தனர். வெறும் கையுடன் தமிழக மீனவர்கள் மீண்டும் சென்னை வந்துசேர்ந்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications