போர்நிறுத்த ஒப்பந்தம்: புலிகளுக்கு இலங்கை ஆதரவு
கொழும்பு:
நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் மீறவில்லை என்று இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர்திலக் மாரப்பனே கூறினார்.
ஆனால் தாங்கள் ஒப்பந்தத்தை எந்தவிதத்திலும் மீறவில்லை என்று அமெரிக்காவுக்கு விடுதலைப்புலிகள் பதிலடிகொடுத்தனர்.
இந்நிலையில் இவ்விஷயத்தில் இலங்கை அரசும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது.பி.பி.சி. வானொலியின் சிங்கள ஒலிபரப்பு சேவைக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பேட்டி கொடுத்தமாரப்பனே கூறியதாவது:
போர்நிறுத்த ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் முறையாகத்தான் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். ஒப்பந்தவிதிமுறைகளை அவர்கள் மீறியதாக இதுவரை எங்களுக்கு எந்தவிதமான தகவலும் வரவில்லை.
மேலும் சிறுவர்-சிறுமிகளை தங்கள் இயக்கத்தில் விடுதலைப்புலிகள் சேர்த்துக் கொண்டு வருகின்றனர் என்றகுற்றச்சாட்டும் தவறானதாகும்.
ஆனால் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் விடுதலைப்புலிகளை அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது மிகவும்வருந்தத்தக்கதாகும் என்றார் மாரப்பனே.
இந்நிலையில் புலிகள் மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டை மற்றொரு இலங்கை அமைச்சரான பி.சந்திரசேகரனும் வன்மையாகக் கண்டித்துள்ளார். இவ்விஷயத்தில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையிடுகிறதுஎன்றும் அவர் கூறினார்.
தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் எம். சிவசிதம்பரமும் அமெரிக்காவுக் இவ்விஷயத்தில் தலையிடஉரிமையில்லை என்று கூறியுள்ளார். ஒப்பந்த விதிமுறை மீறல் உள்ளதா என்பது குறித்து நார்வே கண்காணிப்புகுழுவினர்தான் கூற வேண்டுமே தவிர அமெரிக்கா இதைப் பற்றி எதுவும் கூறக்கூடாது என்று அவர் கூறினார்.
அமெரிக்காவின் இந்தத் திடீர் குற்றச்சாட்டு அமைதிப் பேச்சுவார்த்தையைப் பாதிக்கும் என்று சிலோன் தமிழ்காங்கிரஸ் தலைவர் ஏ. விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தாங்கள் ஒப்பந்தத்தை மீறவில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக விடுதலைப்புலிகளின் அரசியல்ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் கூறியுள்ளதை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதர் ஆஷ்லே வில்ஸ்வரவேற்று, பாராட்டியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications