பூஜைக்கு நானாகத்தான் அனுமதி கேட்டேன்: சோராப்ஜி
டெல்லி:
அயோத்தியில் பூமி பூஜை நடத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தில் நானாகத்தான் அனுமதி கேட்டேன் என்றும்அரசுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அட்டர்னி ஜெனரல் சோலி சோராப்ஜி கூறினார்.
உச்ச நீதிமன்றத்தில் நேற்றைய வழக்கு விசாரணையின்போது, பூமி பூஜை நடத்த அனுமதிக்கலாம் என்றுநீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்து சோராப்ஜி வாதம் செய்தார்.
இதையடுத்து இந்த விஷயம் நாடாளுமன்றத்தில் பெரும் பூகம்பமாக வெடித்தது. எதிர்க் கட்சிகள் மட்டுமல்லாமல்,தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த பாஜக அல்லாத கட்சிகளும் வாஜ்பாய்க்கு எதிராகக் குரல் கொடுக்கஆரம்பித்தனர்.
இந்நிலையில் சோராப்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:
அயோத்தியில் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நிலம், 1994 நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது என்று நான் கருதவில்லை.
அதன்படி சர்ச்சைக்கு அப்பாற்பட்ட பகுதியில் பூமி பூஜை நடத்த அனுமதிக்கலாம் என்று நீதிபதிகளிடம் கோரிக்கைவிடுத்தேன்.
இந்த விஷயம் தொடர்பாக மத்திய அரசு எந்தவிதமான உத்தரவையும் எனக்கு வழங்கவில்லை. ஆலோசனையும்அளிக்கவில்லை. இதை நானாகத்தான் நீதிமன்றத்தில் கூறினேன்.
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பிற்கு ஆதரவாகவும் நான் இந்தக் கருத்தைத் தெரிவிக்கவில்லை.
ஆனாலும் அவை என்னுடைய சொந்தக் கருத்துக்கள் என்றும் அரசு ஒதுக்கிவிட முடியாது. சட்ட திட்டங்களுக்குஉட்பட்டு வாதிட்டு, பின்னர் அதை நீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும் என்றுதான் வாஜ்பாய் என்னிடம்தெரிவித்திருந்தார் என்றார் சோராப்ஜி.
தீர்ப்பின்படி நடப்போம் - வாஜ்பாய்:
இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று பிரதமர் வாஜ்பாய்கூறினார்.
நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு உங்களுக்கு வருத்தமளிக்கிறதா என்று நிருபர்கள் கேட்டதற்கு, மகிழ்ச்சியாவருத்தமாக என்ற கேள்விக்கெல்லாம் இப்போது இடமில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு நடப்போம்என்று வாஜ்பாய் பதிலளித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications