புதுவையில் பள்ளிக் கட்டடத்தை அதிரடியாகத் திறந்த மாணவிகள்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் புதிய பள்ளிக் கட்டடம் ஒன்றை பெற்றோர்களுடன் சேர்ந்து மாணவிகள் அதிரடியாகத் திறந்தனர்.
பாண்டிச்சேரி லாஸ்பேட் பகுதியில் உள்ளது அரசு வெள்ளாளர் பெண்கள் உயர் நிலைப் பள்ளி. இந்தப் பள்ளிதற்போது குடிசையில் இயங்கி வருகிறது.
இதையடுத்து இந்தப் பள்ளிக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு, இதன் திறப்பு விழா கடந்த 11ம் தேதி(திங்கள்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தான் வெளியூரில் இருக்கும்போது திறப்பு விழா நிகழ்ச்சியைநடத்துவதற்கு அந்தத் தொகுதி எம்.எல்.ஏவான ஷாஜகான் பாரூக் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து ஆளுநர், முதல்வர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த அந்தப் பள்ளியின் திறப்பு விழா ரத்துசெய்யப்பட்டது.
இந்த நிலையில் புதிய கட்டிடத்தை திறந்து அதில் மாணவிகளை அனுமதிக்க வேண்டும் என்று பள்ளி மாணவிகள்தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர். ஆனால் அவர் இதுகுறித்து தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றுகூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து அனைத்து மாணவிகளும் பள்ளிக்குச் செல்லும் முக்கிய சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில்இறங்கினர். மாணவிகளுக்கு ஆதரவாக அவர்களது பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து புதிய கட்டிடத்தைத் திறந்து விடுமாறு தலைமை ஆசிரியருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பிறகு அந்தப் பள்ளியின் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது.
சந்தோஷமடைந்த மாணவிகளும் போராட்டத்தைக் கைவிட்டு, புதிய கட்டடத்தில் உள்ள வகுப்பறைகளுக்குச்சென்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications