பொன்முடிக்கு எதிராக வழக்கு தொடர ஜெ. முடிவு
சென்னை:
கடந்த திமுக ஆட்சியின்போது போக்குவரத்துத்துறையில் ஏராளமான ஊழல்கள் நடந்திருப்பதால், அத்துறையின்அமைச்சராக இருந்த பொன்முடி மீது பல வழக்குகளைத் தொடரவிருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று(வெள்ளிக்கிழமை) கூறினார்.
தமிழக சட்டசபையில் ஜெயலலிதா இன்று பேசும்போது, குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல கருணாநிதிஆட்சிக் காலத்தில் பொன்முடியிடம் போக்குவரத்துத்துறை சிக்கி சீரழிந்து விட்டது என்று கூறினார்.
இதைக் கண்டித்து சபையின் எதிர்க் கட்சித் தலைவரான அன்பழகன் தலைமையில் திமுக உறுப்பினர்கள்வெளிநடப்பு செய்தனர்.
இதைத் தொடர்ந்து சபைக் கூட்டம் முடிந்தபின் வெளியே வந்த ஜெயலலிதா நிருபர்களிடம் கூறியதாவது:
கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் பொன்முடி ஏராளமான ஊழல்களைச் செய்துள்ளார். ஆனால் நான் சபையில்பேசும்போது ஒரு சிலவற்றைத்தான் சுட்டிக் காட்டினேன்.
எல்லாவற்றையும் சபையிலேயே நான் சுட்டிக் காட்டியிருக்க முடியும். ஆனால் பொன்முடி அவற்றையெல்லாம்நிச்சயம் மறுக்கத்தான் செய்வார்.
பொன்முடியை நீதிமன்றத்தில் நிறுத்தியே ஆகவேண்டும். அங்கே அவர் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும் என்றார் ஜெயலலிதா.
பின்னர் நிருபர்களிடம் பேசிய பொன்முடி, என் மீது ஜெயலலிதா கூறியுள்ள குற்றச்சாட்டுகளை அவர் நிரூபித்தால்நான் என்னுடைய எம்.எல்.ஏ. பதவியையே ராஜினாமா செய்யத் தயார் என்று கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications