அயோத்தி பூஜை: குஜராத்தில் மீண்டும் கலவரம்- ஊரடங்கு
அகமதாபாத்:
அயோத்தியில் பூஜை நடத்தவும், தூண்களை தானம் வழங்கவும் மத்திய அரசு அனுமதித்தைக் கண்டித்துகுஜராத்தின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது.
ஷாபூர், காரன்ச், காலுபூர் ஆகிய நகர்களில் கலவரம் வெடித்தது. கல்வீச்சும், கத்திக் குத்துகளும் நடந்தன.
இதையடுத்து அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் தான் குஜராத் முழுவதும் கலவரம் வெடித்து 650 பேர் எரித்தும், வெட்டியும் கொல்லப்பட்டனர்.இப்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
ஹைதராபாத்தில் பதற்றம்:
அயோத்தியில் பூஜை நடத்த அனுமதி கொடுத்ததைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடத்திவிட்டுத்திரும்பிய முஸ்லீம்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சார்மினார் அருகே நடந்த இந்த ஆர்பாட்டத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த ஆர்பாட்டக்காரர்களைமுன்னேறிச் செல்லவிடாமல் முஸ்லீம் பெரியவர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்கள் மனித சங்கிலி அமைத்துஇவர்களைத் தடுத்தனர்.
ஆனால், அவர்களையும் மீறி ஆர்பாட்டக்காரர்கள் ஷாலிபண்டா பகுதிக்குள் நுழைந்தனர். இதையடுத்து போலீசார்விரைந்து வந்து தடியடி நடத்தினர்.
தகவல் அறிந்து தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நெருங்கியநண்பருமான லால்ஜான் பாஷா அங்கு விரைந்து வந்தார். கூட்டத்தினரை சமாதானப்படுத்திய அவர் நாம் ஒருமுன்மாதிரியாக செயல்பட்டு அமைதி காப்போம் என்றார்.
முன்னதாக அயோத்தி பூஜையையொட்டி ஹைதராபாத்தில் முழுப் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக முஸ்லீம்கள் பெருமளவில் பள்ளிவாசல்களில் கூடுவர் என்பதால் நாடுமுழுவதும் பள்ளிவாசல்களின் வெளியே பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications