பரமஹம்சிடம் கெஞ்சிய பிரதமர், அத்வானி, பெர்னாண்டஸ்
டெல்லி:
அயோத்தியில் பிரச்சனைக்குரிய இடத்தில் நுழைந்து பூஜை ஏதாவது நடத்தினால் மத்திய அரசே கவிந்து விடும் எனபிரதமர் வாஜ்பாய் கூறியதை அடுத்துத் தான் அந்தத் திட்டத்தை ராமஜென்ம பூமி அறக்கட்டளை கைவிட்டுள்ளது.
நீதிமன்றத் தடையை மீறி பூஜை நடத்துவேன், தடுத்தால் விஷம் குடிப்பேன் என மிரட்டிய ராமஜென்ம பூமிஅறக்கட்டளைத் தலைவர் ராமச்சந்திர தாஸ் பரமஹம்சை சமாதானப்படுத்த முதலில் பாதுகாப்புத்துறை அமைச்சர்ஜார்ஜ் பெர்னாண்டஸ் பலமுறை தொலைபேசியில் பேசினார்.
ஆனால், அவருக்கு கடுமையாக பதிலளித்த தாஸ் பூஜை நடத்தியே ஆவன்ே என்றார்.
இதையடுத்து அத்வானியைக் கொண்டு அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்தன. நேற்றிரவு முழுவதும்டெல்லியில் இருந்த அத்வானி அயோத்தியில் இருந்த பரமஹம்சிடம் பலமுறை தொலைபேசியில் பேசினார்.நீதிமன்றத்தில் பூஜைக்கு ஆதரவான நிலையை மத்திய அரசு எடுத்ததையும் தொடர்ந்து எப்படியும் போராடிபூஜைக்கு அனுமதி பெற்றுத் தருவதாகவும் கூறினார்.
ஆனால், அதே நேரத்தில் இப்போது நீதிமன்றத் தடையை மீறி பூஜை நடத்தினால் எதிர்காலத்தில் கடும்பிரச்சனைகளை அரசு சந்திக்கும் என்றார். இதையெல்லாம் பொறுமையாகக் கேட்ட பரமஹம்ஸ் பூஜை நடத்துவேன்,வேண்டுமானால் என்னைக் கைது செய்து கொள்ளுங்கள் என மத்திய உள்துறை அமைச்சரை மிரட்டினார்.
இதையடுத்து பிரம்மாஸ்திரம் பயன்படுத்தப்பட்டது. பிரதமர் வாஜ்பாயே நேரடியாக பரமஹம்சிடம் நள்ளிரவில்பேசினார். பிரச்சனைக்குரிய இடத்தில் பூஜைக்கு அனுமதி தந்தால் தனது ஆட்சி கவிழும் என்பதை விளக்கினார்.தெலுங்கு தேசம், திமுக உள்ளிட்ட கட்சிகள் பா.ஜ.க. ஆட்சியைக் கவிழ்த்துவிடும். இதனால், வி.எச்.பியும்,ராமஜென்மபூமி அறக்கட்டளையும் மேலும் பிரச்சனைகளைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும் என்று விளக்கம்தந்தார்.
இதைத் தொடர்ந்து தற்கொலை மிரட்டலை விட்டுவிட்டு பிரச்சனைக்கு சம்பந்தமே இல்லாத தூரத்தில் உள்ள ஒருஇடத்தில் தூணை தானம் செய்யும் நிகழ்ச்சியை மட்டும் நடத்துவதாக பரமஹம்ஸ் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications