பா.ஜ.க. எம்.பிக்கள் வாஜ்பாய்க்கு மிரட்டல் கடிதம்: சோனியா தகவல்
டெல்லி:
அயோத்தி விவகாரத்தில் வி.எச்.பியை ஆதரித்தே ஆக வேண்டும் என பா.ஜ.க. எம்.பிக்கள் கடந்த 7ம் தேதிபிரதமர் வாஜ்பாய்க்கு மிரட்டல் கடிதம் எழுதியதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.
அந்தக் கடிதங்களின் நகல்கள் கூட தன்னிடம் இருப்பதாக நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.
இதனால் கடந்த 4 நாட்களில் வாஜ்பாயின் நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டதாகவும் வி.எச்.பிக்கு ஆதரவாகநீதிமன்றத்தில் மத்திய அரசு நடந்து கொண்டதாகவும் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.
மதவாத அமைப்பான வி.எச்.பியுடன் வெளிப்படையாகவே கைகோர்த்துக் கொண்டுவிட்ட வாஜ்பாய் உடனேராஜினாமா செய்ய வேண்டும் என்றார். வி.எச்.பியை இனி கட்டுப்படுத்தும் பலம் வாஜ்பாய்க்கு இல்லை.
பா.ஜ.க. எம்.பிக்களின் மிரட்டலையடுத்து அவர்கள் சொல்படிதான் இனி வாஜ்பாய் செயல்பட முடியும் என்பதுதெளிவாகிவிட்டது.
முதலில் அயோத்தியில் யாரையும் நுழைய அனுமதிக்க வேண்டாம் என உத்தரவிட்ட மத்திய அரசு பின்னர் அங்குசெல்லும் கரசேவகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டது.
மதவாத அமைப்புகளுக்கு அடிபணிய ஆரம்பித்துவிட்டார் வாஜ்பாய். தேச நலனை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டுஆட்சியை மட்டுமே குறிவைத்து வாஜ்பாய் செயல்பட ஆரம்பித்துவிட்டார்.
வாஜ்பாய் நடுநிலையானவர் என நம்பிய இந்த நாட்டு மக்களை மோசம் செய்துவிட்டார். ஆனால், வி.எச்.பிக்குஆதரவாக மத்திய அரசு வக்கீல் நீதிமன்றத்தில் எப்போது பேசினாரோ அப்போதே அந்த நம்பிக்கைதவிடுபொடியாகிவிட்டது.
இதற்காக மத்திய அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும். குஜராத்தில் கூட கலவரம் நடக்கவிட்டு பா.ஜ.க. அரசுவேடிக்கை தான் பார்த்தது. அம் மாநில அரக்கு அமைச்சர் அத்வானி வக்காலாத்து வாங்குவது கேவலத்திலும்கேவலம் என்றார் சோனியா.
இதை வாஜ்பாய் வெறித்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
தெலுங்கு தேசம் எச்சரிக்கை:
ராஜ்யசபாவில் பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. ராமச்சந்திரய்யா,
நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது மத்திய அரசுக்கு அயோத்தி தான் பெரியவிஷயமாகிவிட்டதா? சிலருக்கு (வி.எச்.பி.) மத்திய அரசு அடிபணிந்து போகிறது என்பது தெளிவாகிவிட்டது. இதுஅரசுக்கு நல்லதல்ல. இது சில விரும்பத்தாக விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறேன்.
அயோத்தி விஷயத்தில் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் கலந்து ஆலோசனை செய்யவில்லையே ஏன்?எங்களிடம் இருந்து எதை மறைக்கப் பார்க்கிறீர்கள்?
தவறுகள் செய்துவிட்டு அரசு தப்பிவிட முடியாது. நிச்சயம் அதற்கான பலன்களை அனுபவிக்க வேண்டி வரும்.இப்போது நாடு இருக்கும் நிலையில் அயோத்தியில் பூஜை நடத்துவது அவ்வளவு அவசியமா?
பட்ஜெட் என்ற பெயரில் வரிச்சுமையைப் போட்டு தாக்கியிருக்கிறீர்கள். பொருளாதாரம் நாளுக்கு நாள் நசிந்துகொண்டிருக்கிறது. அதைக் கவனிப்பதைவிட்டுவிட்டு அயோத்தி உங்களுக்கு மிக முக்கியமானதாகிவிட்டதா?என்றார்.
இதற்கு பா.ஜ.க எம்.பிக்களும் மத்திய அமைச்சர்களும் எந்த பதிலும் கூறாமல் அமர்ந்திருந்தனர்.
இந்த மிரட்டல் மூலம் மத்திய அரசுக்கு நேரடியாக தெலுங்கு தேசம் தனது எதிர்ப்பைக் காட்டிவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications