பெங்களூரில் வன்முறை வெடித்தது: ஊரடங்கு அமல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

அயோத்தியில் வி.எச்.பிக்கு பூஜை நடத்த அனுமதி தந்ததைக் கண்டித்து பெங்களூரிலும் கலவரம் வெடித்துள்ளது.

இதையடுத்து ஜெகஜீவன்ராம் நகரில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெஜீவன்ராம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மைசூர் ரோட்டு சிர்சி சர்க்கிள் முதல் பின்னிப்பேட்டை வரைஇந்த ஊரடங்கு அமலில் உள்ளது.

அயோத்தி தூண் தான நிகழ்ச்சியையொட்டி நேற்று இரவில் ஜெகஜீவன்ராம் நகரிலும் பூஜை நடந்தது. பூஜையில்கலந்து கொண்டவர்கள் பிற மதத்தினரைக் கண்டித்துப் பேசினர்.

இதையடுத்து பூஜையில் கலந்து கொண்டவர்கள் மீது கல்வீச்சும், சோடா பாட்டில் வீச்சும் நடந்தது.

இதையடுத்து அவர்களும் திருப்பித் தாக்கினர். இந்த மோதலை போலீசார் உடனடியாகத் தலையிட்டுத் தடுத்தனர்.ஆனாலும் பெரும் பதற்றம் நிலவி வந்தது.

இந் நிலையில் இன்று காலை அந்தத் தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான சோமண்ணா அனைத்துத்தரப்பினரையும் அமைதியாக இருக்குமாறு வலியுறுத்த அப் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாகச்சென்றார்.

ஆனால், இந்த ஊர்வலத்தின் மீதும் திடீரென தாக்குதல் நடந்தது. கற்களும், சோடா பாட்டில்களும் வீசப்பட்டன.

இதில் சோமண்ணாவின் கண் அருகே காயம் ஏற்பட்டது. ஊர்வலத்தினரை 2,000 பேர் கொண்ட கும்பல் தாக்கத்தொடங்கியது. இதில் பலருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அனைவரும் சிதறி ஓடினர். பலருக்கும் மண்டை உடைந்தது.

ஊர்வலத்துக்கு பாதுகாப்பாகச் சென்ற சப்-இன்ஸ்பெக்டரின் முகத்தில் கல் தாக்கியதில் அவரது முகம் சிதைந்தது.

கல்வீச்சில் தொடங்கிய இந்த மோதல் தீவைப்பாக மாறியது. பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பஸ்களும்உடைக்கப்பட்டன.

இதையடுத்து சோமண்ணாவை போலீஸ் வேனில் ஏற்றிக் காப்பாற்றி அழைத்துச் சென்றனர். கலவரம் மிகப் பெரியஅளவில் பரவியதையடுத்து போலீசார் தடியடி நடத்திப் பார்த்தனர். ஆனால், நிலைமை அடங்கவில்லை.

இதையடுத்து அதிரடிப் படையை அனுப்ப முதல்வர் கிருஷ்ணா உத்தரவிட்டார். இந்தப் படையினர் இப்போதுஅந்தப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் மீறி சிலர் வன்முறையில் இறங்கியதையடுத்து அந்தப் பகுதியில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தமுதல்வர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து பெங்களூரில் மையப் பகுதியான ஜெகஜீவன்ராம் நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.நிலைமை சரியானால் மாலையில் ஊரடங்கு தளர்த்தப்படும். இல்லாவிட்டால் இரவிலும் ஊரடங்கு அமலில்இருக்கும்.

இந்தப் பகுதியில் இந்துக்களும் முஸ்லீம்களும் சம அளவில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வீச்சில் தொடங்கிய இந்த மோதல் தீவைப்பாக மாறியது. பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இருதரப்பினரும் கைகளில் அரிவாள், வாள்களுடன் மோதிக் கொண்டனர்.

இதில் 5 பேர் படுகாயமடைந்தனர். கலவரததைத் தடுக்கச் சென்ற 3 போலீசாரும் காயமடைந்தனர்.

போலீசார் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால் பெரும் வன்முறை தவிர்க்கப்பட்டுள்ளது. இப்போதுநிலைமை அங்கு கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

குஜராத்திலும், ஹைதராபாத்திலும் நடந்த வன்முறை இன்று பெங்களூருக்கும் பரவியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+