பொன்முடியின் விழுப்புரம் வீட்டில் ரெய்ட் தொடர்கிறது
விழுப்புரம்:
முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியில் விழுப்புரம் வீட்டில் நேற்றிரவு தாங்கள் வைத்த சீலை போலீசாரே இன்றுகாலை உடைத்தனர். அந்த வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்துத்துறைகளை தனியார்மயமாக்குவதில் ஜெயலலிதாவுக்கும் பொன்முடிக்கும் இடையேசட்டமன்றத்தில் நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் பொன்முடி மீது விரைவில் சட்டப்படி நடவடிக்கைவரும். அவர் அதை நீதிமன்றத்தில் சந்திந்துக் கொள்ளட்டும் என்று ஜெயலலிதா கூறினார்.
அவர் அவ்வாறு கூறிய 3வது மணி நேரத்தில் பொன்முடியின் சென்னை வீட்டில் வந்திறங்கி சோதனை நடத்தியதுபோலீஸ். இரவு முழுவதும் சோதனை நடந்தது.
ஆனால், அவரது விழுப்புரம் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால், அங்கு சோதனைக்குச் சென்ற போலீசார் அதை சீல்வைத்துவிட்டுத் திரும்பினர்.
விழுப்புரம் விரைந்த பொன்முடி:
இதையடுத்து இன்று காலை பொன்முடி விழுப்புரம் விரைந்தார். அவரது முன்னிலையில் போலீஸ் படையினர் சீலைஉடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். காலை முதல் ரெய்ட் நடந்து கொண்டிருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறைஎஸ்.பி. ஈஸ்வரமூர்த்தி தலைமையில் 10 போலீசார் இந்தச் சோதனையை நடத்திக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து திமுக எம்.பி. ஆதிசங்கர், எம்.எல்.ஏ. புகழேந்தி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினர்பொன்முடியின் வீட்டின் முன் குவிந்துள்ளனர். இவர்களைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான போலீசாரும்குவிக்கப்பட்டுள்ளனர்.
பொன்முடியின் அண்ணன், தம்பி, உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் ஆகியோரின் வீடுகள், இவர்களதுகடைகள் ஆகிய இடங்களிலும் நேற்றிரவில் சோதனைகள் நடந்தன.
கடலூரில் உள்ள பொன்முடிக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் ஷோ-ரூமிலும் ரெய்ட் நடந்தது.
பிற திமுக தலைவர்களின் வீடுகளில் சோதனைகள் நடந்தாலும் பொன்முடியின் வீடுகளிலும், உறவினர்களினவீடுகளிலும் தான் தீவிர ரெய்ட் நடந்து வருகிறது.
நகைகள் சிக்கின:
பொன்முடியின் வீட்டிலிருந்து பெருமளவிலான நகைகளும், பணமும் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications