காவிரி டெல்டா பகுதிகளில் சாலை மறியல்: 2,000 விவசாயிகள் கைது
தஞ்சாவூர்:
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடப்பட்டதை எதிர்த்து காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் இன்று(திங்கள்கிழமை) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 950 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் சனிக்கிழமையுடன் மூடப்பட வேண்டும் என்று தமிழகஅரசு உத்தரவிட்டது.
இதனால் காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதையடுத்து இன்று தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள்,ஆடுதுறை, புதுக்குடி, கண்டமங்கலம், பேராவூரணி உள்பட சுமார் 100 இடங்களில் சாலை மறியல் போராட்டம்நடத்தினர்.
இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும் இரண்டு நேரடி நெல் கொள்முதல்நிலையங்களையும் விவசாயிகள் முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடங்களுக்கு விரைந்த போலீசார், சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து போகுமாறுவிவசாயிகளைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் சாலை மறியலைக் கைவிட மறுத்தனர்.
இதையடுத்து சுமார் 2,000 விவசாயிகளைப் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications