கருணாநிதி அலுவலகம் மீது தாக்குதல்: திமுக பிரமுகரிடம் போலீஸ் விசாரணை
சென்னை:
சென்னையில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் எம்.எல்.ஏ. அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாகசேப்பாக்கம் திமுக செயலாளரான ஏ.கே. ஜெகதீசனைப் இன்று (செவ்வாய்க்கிழமை) போலீசார் பிடித்துச் சென்றுவிசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை-சேப்பாக்கத்தில் கடந்த 8ம் தேதிதான் தன்னுடைய எம்.எல்.ஏ. அலுவலகத்தை கருணாநிதி திறந்துவைத்தார். ஆனால் மறுநாளே அந்த அலுவலகத்தை யாரோ கல் வீசிச் சேதப்படுத்தினர்.
இது தொடர்பாக கருணாநிதி கடந்த 10ம் தேதி காலை அந்த அலுவலகத்தில் வைத்தே திடீர் உண்ணாவிரதத்தைமேற்கொண்டார். இதனால் சென்னை மாநகரமே மிகுந்த பரபரப்புக்குள்ளானது.
இந்தத் தாக்குதலை நடத்திய உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுப்போம் என்றுசென்னை போலீஸ் கமிஷனர் விஜயகுமார் மற்றும் வடசென்னை போலீஸ் துணை கமிஷனர் சைலேந்திர பாபுஆகியோர் உறுதியளித்ததன் பேரில், இரண்டு மணி நேரத்தில் தன்னுடைய உண்ணாவிரதத்தை கருணாநிதி வாபஸ்பெற்றுக் கொண்டார்.
இதற்கிடையே இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்று விசாரித்து வந்த போலீசார், இன்று ஜெகதீசனைஅழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இன்று காலை சென்னை மாமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டுத் திரும்பிய ஜெகதீசனை, திருவல்லிக்கேணிபோலீசார் வழியிலேயே மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய ஜெகதீசன், உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டு என்னைப் பிடித்துபோலீசார் விசாரிக்கின்றனர். தமிழக அரசின் பேச்சைக் கேட்டு அவர்கள் டான்ஸ் ஆட வேண்டிய சூழ்நிலையில்உள்ளனர் என்றார்.
ஜெகதீசனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications