முத்துக்கருப்பன் மீது நில மோசடி புகார் மனு தாக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் மீது நில மோசடி புகார் மனு ஒன்று முதன்மை செஷன்ஸ்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நில மோசடி தொடர்பாக சென்னையை சேர்ந்த சண்முகம் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட ரமேஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை நான்வாங்கினேன்.
ரமேஷ் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்திய முத்துக்கருப்பன், இந்த சொத்துக்கள் குறித்தும் விசாரித்தார்.இந்த நிலத்தை ஜெயலலிதா வாங்க விரும்புவதாக கூறி, நிலத்துக்கான பத்திரத்தை வாங்கி சென்றார்.

தற்போது அந்த நிலத்திற்கான பத்திரங்கள் முத்துக்கருப்பனிடம் தான் உள்ளது. எனது நிலத்தை அபகரித்துக்கொண்ட முத்துக்கருப்பனுக்கு எதிராக நான் போலீஸில் புகார் கொடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை.

எனவே, எனது நிலத்தை அபகரித்த முன்னாள் போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் மீது நடவடிக்கை எடுக்கஉத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் சண்முகம் கூறிள்ளார்.

இம்மனு திங்கள்கிமை முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவைவிசாரித்த நீதிபதி, இந்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அடுத்த மாதம் 3ம்தேதிக்குள் அறிக்கைத் தாக்கல் செய்யும்படி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+