பொடோ மசோதா நாளை ராஜ்யசபாவில் தாக்கல்
டெல்லி:
மக்களவையில் பொடோ சட்டம் நேற்று (திங்கள்கிழமை) வெற்றிகரமாக நிறைவேறியதையடுத்து, நாளை அதுராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படுகிறது.
நேற்று பொடோ சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, அதை எதிர்த்த காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தன.
அதன் பின்னர் பொடோ மசோதா குறித்த வாக்கெடுப்பு நடந்தது. அப்போது இந்த மசோதாவிற்று ஆதரவாக 261வாக்குகளும் எதிராக 137 வாக்குகளும் கிடைத்தன.
அதிமுக எம்.பிக்கள் அனைவரும் பொடோவிற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக இச்சட்டத்திற்கு எதிராக வாக்களித்தது. மற்றொரு கூட்டணிக் கட்சியானதிரிணாமூல் காங்கிரசோ இந்த வாக்கெடுப்பிலேயே கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று ராஜ்யசபாவில் பொடோ சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால்நாளைதான் தாக்கல் செய்யப்பட உள்ளது. எதிர்க் கட்சி உறுப்பினர்கள்தான் அதிகம் என்பதால், ராஜ்யசபாவில்பொடோ நிச்சயம் நிறைவேறாது என்றே தெரிகிறது.
அப்படி ராஜ்யசபாவில் பொடோ சட்டம் நிறைவேறாத பட்சத்தில், நாடாளுமன்ற இரு சபைகளின் கூட்டுக்கூட்டத்தையும் வரும் 26ம் தேதி கூட்டி இம்மசோதாவை நிறைவேற்ற பிரதமர் வாஜ்பாய் முடிவு செய்துள்ளதாகத்தெரிகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications