கருணாநிதி மகன் கடையில் கத்தி முனையில் ரூ.4 ஆயிரம் கொள்ளை
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் மகனான மு.க. தமிழரசுவின் கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.4,000பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற இரண்டு பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை-ராயப்பேட்டையில் ஒரு துணிக் கடையையும் அதன் அருகில் டெலிபோன் பூத்துடன் கூடிய ஐஸ்கிரீம்பார்லரையும் தமிழரசு நடத்தி வருகிறார்.
கடந்த புதன்கிழமை இரவு அங்கு வந்து ஐஸ்கிரீம் சாப்பிட்ட இரண்டு இளைஞர்கள், பில் பணத்தைத் தர மறுத்தனர்.
இதையடுத்து ஏற்பட்ட தகராறில், கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த நவீன்குமாரை அந்த இளைஞர்கள்கத்தியைக் காட்டி மிரட்டினர்.
அதன் பின்னர் அந்த இளைஞர்கள் நவீன்குமாரை மிரட்டி, கடையிலிருந்த ரூ.4,000 பணத்தை எடுத்துக் கொண்டுஓடிவிட்டனர்.
இதுகுறித்து ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் நவீன்குமார் புகார் கொடுத்தார். போலீசார் இச்சம்பவம் குறித்துவழக்குப் பதிவு செய்து, அந்த இரண்டு இளைஞர்களையும் தேடி வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications